அந்த ஸ்டார் நடிகருக்கு தங்கையாகும் நயன்தாரா.!? வருத்தத்தில் ரசிகர்கள்.!

நயன்தாரா

 

நடிகை நயன்தாரா ஆர்.ஜே.பாலாஜியுடன் மூக்குத்தி அம்மன் படம் நடித்து வெற்றி பெற்றதை தொடர்ந்து, தற்போது தனது ஆண் நண்பரான விக்னேஷ் சிவன் இயக்குகின்ற ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.

 

இந்த படத்தில் நடிகை சமந்தா மற்றும் விஜய் சேதுபதி ஆகியோரும் நடிக்கின்றனர். மேலும், சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்க என்ற அண்ணாத்த படத்திலும் நயன்தாரா நடித்து வருகிறார்.

மேலும் அவருடைய நெற்றிக்கண் திரைப்படமும் தற்போது தயாராகி வருகிறது. வேறு சில தெலுங்கு திரைப்படங்களிலும் நடிகை நயன்தாரா ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். தற்போது, லூசிபர் ரீமேக்கில் நடிகர் சிரஞ்சீவிக்கு தங்கையாக நடிகை நயன்தாரா நடிக்க உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

அடுத்த மாதம் நயன்தாராவுக்கு திருமணம் நடைபெற உள்ளதாக கூறப்பட்ட நிலையில், இப்படி வரிசையாக படங்களில் நயன்தாரா கம்மிட் ஆகி இருப்பதை கண்டால் அந்த தகவலின் மேல் நம்பிக்கையின்மை ஏற்படுகிறதுவதாக ரசிகர்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.