ஒரே நேரத்தில் ‘பெற்றோரின் சம்மதத்துடன் இரண்டு பெண்களை திருமணம் செய்த வாலிபர்…!

இந்தியா

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ஜகதல்பூர் பகுதியை சார்ந்த விவசாயி சந்து மவுரியா. இவர் சத்தாரி மற்றும் ஹசீனா என்ற இரண்டு பெண்களை திருமணம் செய்துகொண்டுள்ள சம்பவம் நடைபெற்றுள்ளது.

சத்தாரி – சந்து மவுரியா இடையே செல்போன் மூலமாக ஏற்பட்ட காதலானது திருமணம் வரை மலர்ந்துள்ளது. இதனையடுத்து தம்பதிகள் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்துள்ளனர். இந்த விஷயத்திற்கு உள்ளாகவே, உறவினரின் திருமண விழாவிற்கு சென்ற சந்து மவுரியா ஹசீனா என்ற பெண்ணை சந்தித்துள்ளார்.

இதனையடுத்து, இருவருக்குள்ளும் காதல் மலரவே, சந்து மவுரியா இருவரையும் காதலித்து வந்துள்ளார். இவர்கள் மூவரும் திருமணம் செய்வதற்கு முன்னதாக ஒரு வருடம் ஒன்றாகவும் வாழ்ந்துள்ளனர். இதன்பின்னர் இவர்களுக்குள் புரிதல் ஏற்பட்டு மூவரும் சேர்ந்து வாழ முடிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் 3 ஆம் தேதி இவர்களின் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த திருமணத்தில் 600 க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்துகொண்ட நிலையில், மணமக்களை அனைவரும் வாழ்த்தினர்.

தம்பதிகள் மூவரும் தங்களின் புதுமண வாழ்க்கையை மகிழ்ச்சியாக கழித்து வருவதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.