கண்ணம்மா மனநிலை பாதித்ததாக கூறப்பட்ட நிலையில், சீரியலில் இருந்து முக்கிய நடிகை விலகல்.!

பாரதிகண்ணம்மா

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் பிரபலமான சீரியல்களில் முக்கியமானது பாரதிகண்ணம்மா சீரியல். இல்லத்தரசிகள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

இதில் கண்ணம்மா கர்ப்பிணியாக இருக்கும் பொழுது வீட்டை விட்டு வெளியேறி மிகவும் அவதிக்குள்ளாகிய எபிசோடுகள் டி.ஆர்.பியில் முதலிடம் பிடித்தது. இதற்கு காரணம் சமூக வலைத்தளங்களில் பரவிய மீம்ஸ்கள் தான்.


இல்லத்தரசிகளின் அன்றாட வாழ்க்கையில் ஒரு அங்கமாக இருக்கும் கண்ணம்மா சீரியலில் இருந்து தற்போது முக்கிய நடிகையாக விலக இருக்கிறார்.பாரதி கண்ணம்மா சீரியலில்பாரதிக்கு தங்கையாக நடித்து வந்த காவியா தற்போது பாரதிகண்ணம்மா தொடரில் இருந்து விலகி உள்ளதாக கூறப்படுகிறது.


பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் உள்ள முல்லை வேடத்தில் காவ்யா நடித்து வருகிறார். எனவே, அவர் பாரதிகண்ணம்மா சீரியலில் இருந்து விலகி இருப்பதாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியுள்ளார்.

இதுகுறித்து, தனது ஸ்டோரியில் மிஸ்ஸிங் என்று சோக ஸ்மைலி போட்டு பாரதி கண்ணம்மா டீம் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கின்றார்.