குறைந்த விலையில் பழைய செல்போன் வாங்குவோர் கவனத்திற்கு…, காவல்துறை விசாரணைக்கு ப.யந்து அ.ரங்கேறிய சோ.கம்.!

சென்னை

சென்னையில் உள்ள அமைந்தகரை பகுதியை சார்ந்தவர் லட்சுமணன். இவர் அம்பத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். லட்சுமணனிற்கு 24 வயதாகும் நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னதாக மூர்மார்கெட் பகுதியில் உள்ள செல்போன் கடையில் பழைய செல்போனை வாங்கியுள்ளார்.

சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் செல்போன் திருட்டு அதிகமாக நடந்து வரும் நிலையில், லட்சுமணன் வாங்கிய பழைய செல்போனில் தனது சிம் கார்டை பயன்படுத்தி வந்துள்ளார். இந்நிலையில், லட்சுமணனிற்கு காவல் நிலையத்தில் இருந்து அழைப்பு வந்துள்ளது.

அந்த அழைப்பில் பேசிய காவல் அதிகாரி, செல்போன் தொடர்பாக விசாரணை செய்ய காவல் நிலையத்திற்கு வர சொல்லியுள்ளனர். இதனையடுத்து காவல் நிலையத்தில் மேற்கொண்ட விசாரணையில், செல்போனை மூர்மார்கெட் பகுதியில் உள்ள கடையில் வாங்கியதாக தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து நாங்கள் அழைக்கும் சமயத்தில், கடைக்கு வந்து விற்பனை செய்த நபரை அடையாளம் காண்பிக்குமாறும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து வீட்டிற்கு சென்ற நிலையில், காவல்நிலையத்திற்கு சென்று வந்ததால் அ.வமானம் ஏற்பட்டு விட்டதாக கருதிய த.ற்.கொ.லை செய்து கொள்ளப்போவதாக தெரிவித்துள்ளார்.

பெற்றோர்களும் ஆறுதல் கூறி சமாதானம் செய்த நிலையில், காலையில் நுங்கம்பாக்கம் அருகேயுள்ள த.ண்டவாளத்தில் பி.ணமாக கி.டந்துள்ளார்.

இவரது உ.டலை மீட்ட காவல் துறையினர், பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விஷயம் தொடர்பாக விசாரணை செய்து வருகின்றனர்.