திறந்துகிடந்த சாக்கடை… நிரம்பி வழிந்த மழைநீர்.. பச்சிளம் பிஞ்சுகளின் நெகிழ்ச்சி செயல்..! வீடியோ!

தமிழகத்தில்

வடகிழக்கு பருவமழை காரணமாக நல்ல மழையானது பெய்து வருகிறது. இதனால் தமிழகத்தில் உள்ள பெரும்பான்மையான நீர் நிலைகள் நிரம்பி, மக்களின் உள்ளத்தையும் சுற்றுவட்டார பகுதியையும் குளுமைப்படுத்தியுள்ளது.

மழைக்காலங்களை பொறுத்த வரையில் இயல்பாகவே சில இடங்களில் அதிகளவு நீர் தேங்கி நிற்பது வழக்கமான விஷயமாகும். சில இடங்களில் மக்கள் அதிகளவில் நடமாடும் பகுதியில் சாக்கடைகள் சரிவர பராமரிக்கப்படாமல் இருக்கும்.

இவை திறந்த நிலையில் இருக்கும் போது, மழைக்காலங்களில் பாதசாரிகள் அல்லது வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் வாய்ப்பு உள்ளது. இந்நிலையில், இரண்டு குழந்தைகளின் செயல் காண்போரை நெகிழ்வடைய செய்துள்ளது.

மழைபெய்துகொண்டு இருக்கும் நேரத்தில் அக்கா தம்பியாக கடைக்கு சென்று வந்த இரண்டு குழந்தைகள், வரும் வழியில் சாக்கடை திறந்த நிலையில் இருந்துள்ளது. இதனைக்கண்ட அக்கா தம்பியிடம் வாங்கி வந்த பொருளை கையில் கொடுத்துவிட்டு, அருகில் உடைந்த நிலையில் கீழே போடப்பட்டு இருந்த பேரிக்கார்டை எடுத்து திறந்து கிடந்த சாக்கடையில் மேலே வைத்து, அருகில் இருந்த மற்றொரு பலகையை எடுத்து மூடி வைத்துவிட்டு சென்றுள்ளனர். தம்பியும் அக்கா மழையில் நனையாமல் இருக்க குடையை பிடித்துக்கொண்டு இருக்கிறார். இந்த நெகிழ்ச்சி வீடியோ வைரலாகி வருகிறது.