“தேன்மொழி B.A” சீரியல் அதிரடி நிறுத்தம்.! ஓஹோ.. இது தான் காரணமா.?!

தேன்மொழி B.A

தற்போது பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் சினிமாக்களை விட தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் தொடர்களுக்கு அடிமையாக மாறி விட்டனர். ஊரடங்கு காலகட்டத்தில் திரையரங்குகள் மூடப்பட்டது இதற்கு ஒரு காரணம்.

மேலும், ஒருநாள் சீரியலை பார்க்கா விட்டாலும் கூட அந்த எபிசோடை இணையத்தில் தேடி அது பார்த்து விடுகின்றனர். இத்தகைய நிலையில், விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மிகவும் வரவேற்பை பெற்று வருகின்ற “தேன்மொழி B.A” என்ற தொடர் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.

இதில் பிரபல தொகுப்பாளினி ஆன ஜாக்குலின் கதாநாயகியாக நடித்து இருப்பார். திடீரென்று எந்த அறிவிப்பும் இல்லாமல், இந்த சீரியல் நிறுத்தப்பட்டது. இது அந்த சீரியலின் ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக அமைந்தது.

இந்நிலையில், விஜய் டிவி ட்விட்டர் தளத்தில், “சிரமத்திற்கு வருந்துகிறோம். ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு தேன்மொழி B.A தொடரும்.” என்று அதிகாரபூர்வமாக அறிவித்தது. இந்நிலையில் இதற்கு காரணம் இந்த சீரியலின் ஹீரோவான நடிகர் சித்தார்த் குமரனுக்கு பட வாய்ப்பு கிடைத்துள்ளது தான்.” என்று கூறப்படுகிறது.