பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறப் போறது இவர் தானாம்., உறுதியான தகவல்.!

பிக்பாஸ் 4

தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதமாக இருப்பது பிக்பாஸ் நிகழ்ச்சி தான். கடந்த அக்டோபர் 4ஆம் தேதி துவங்கிய இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி 16 போட்டியாளர்களுடன் சிறப்பாக சென்ற நிலையில், வாரம் ஒரு போட்டியாளர் விதம் செய்யப்பட்டு தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

கடந்த வாரம் நிகழ்ச்சியில் ஆஜித் எலிமினேட் செய்யப்பட்டார். இந்நிலையில், அடுத்ததாக யார் இந்த வாரம் வெளியேற போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் கிளம்பியுள்ளது.

ஆரி மற்றும் பாலாஜி இருவரும் பெருவாரியான வாக்குகளை பெற்று முதல் மற்றும் இரண்டாம் இடத்தில் இருக்கின்றனர்.

சோம் சேகர் நேரடியாக பைனல் சென்றுவிட்டார். அடுத்ததாக கேபி மற்றும் ரியோ இருவரும் அடுத்தடுத்த நிலையில் வாக்குகளை பெற்று முன்னணியில் இருக்கின்றனர். ஷிவானி மற்றும் ரம்யா இருவரும் மட்டுமே மிச்சம் உள்ளனர்.

இவர்களில் ரம்யா மக்களிடம் அதிக வெறுப்பை பெற்று வருவதால் அவர் வெளியேற்றப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,

குறைவான வாக்குகளை பெற்று இந்த வாரம் ஷிவானி தான் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற போகிறார் என்று நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.