“முத்துக்கு முத்தாக” திரைப்படத்தை போல சோகம்… பெண்வீட்டால் ஜீவிக்குமாருக்கு நேர்ந்த சோகம்!

தமிழகம்

 

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள வெள்ளாங்கோடு பகுதியை சேர்ந்தவர் ஜினிகுமார். இவர் சென்னையில் உள்ள பூக்கடை காவல் நிலையத்தில், காவல் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். கடந்த 2011 ஆம் வருடத்தில் அங்குள்ள நட்டாலம் பகுதியைச் சார்ந்த செலின் ஷீபா என்ற பெண்மணிக்கும், ஜினிகுமாருக்கும் இடையே திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது.

ஜினிகுமார் தற்போது சென்னையில் இருக்க, மனைவி நட்டாலம் பகுதியிலேயே இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் ஆறாம் தேதி சென்னையில் இருந்து மனைவி குழந்தைகளை பார்க்க நட்டாலம் பகுதிக்கு சென்றுள்ளார்.

இதன்போது அவரின் மாமியார், மனைவி மற்றும் மைத்துனர் ஆகியோர் சேர்ந்து, ஜீவிக்குமாருக்கு சொந்தமான சொத்துக்களை மனைவி பெயரில் எழுதிக்கொடுக்க கூறி தா.க்.கி.யு.ள்.ள.ன.ர். மேலும், காவல் அதிகாரியை செ.ரு.ப்.பா.ல் அ.டி.த்.த.தா.க.வு.ம் கூறப்படுகிறது.

இதனால் ம.ன.மு.டை.ந்.த ஜீவிக்குமார் தந்தை வீட்டிற்கு சென்ற நிலையில், அந்த நாளிலிருந்து இன்றுவரை காணவில்லை என்று கூறப்படுகிறது. மேலும், அவர் எழுதி வைத்திருந்த இரண்டு பக்கமும் கைப்பற்றப்பட்டுள்ளது. அதில், இளமை காலத்தில் தாய் தந்தைபட்ட கஷ்டம், வறுமையிலும் தன்னையும் சகோதரியையும் பராமரித்து வளர்த்து வந்தது, கஷ்டத்திலும் தன்னை கல்லூரியில் படிக்க வைத்து, பிடித்தமான காவல் துறை வேலை கிடைக்க உதவி செய்தது, இரண்டு சகோதரிகளின் திருமணத்தை கஷ்டப்பட்டு செய்து கொடுத்தது என தந்தையின் தியாகங்கள் குறித்து கூறியுள்ளார்.

மேலும், எனது தாயார் பு.ற்றுநோ.யால் பா.திக்கப்பட்டு இருந்த நிலையில், மருமகள் என்ற முறையில் அவரது மாமியாரின் சிகிச்சைக்கு பணம் கொடுக்கவும் விடாமல், என் பிள்ளைகளைக் கூட தாயார் பார்க்கவிடாமல் கொ.டு.மை செ.ய்தார். மனைவியை பராமரிக்கும் பொறுப்பு கணவனுக்கு உள்ளதை போல, தந்தை மற்றும் தாயை பராமரிக்கும் பொறுப்பு மகனுக்கும் உள்ளது. எனக்கு சொந்தமான நிலம் தந்தைக்கு உரிமையானது. எனது வா.ழ்க்கையை நான் முடித்துக் கொள்ள போகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

கடிதத்தை எழுதி வைத்த ஜினிகுமார் தற்போது வரை மா.ய.மா.கி.யு.ள்.ள நிலையில், த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.டா.ரா.? அல்லது வேறு ஏதும் மாநிலத்தில் உள்ளாரா? என்பது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது. காவல் துறையினர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து, மாயமான காவல் அதிகாரி ஜினிகுமாரை தேடி வருகின்றனர்.