கோலி – அனுஷ்கா தம்பதியினருக்கு குழந்தை பிறந்தது! என்ன குழந்தை தெரியுமா!?

விராட் கோலி

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி மனைவி அனுஷ்கா சர்மாவிற்கு பெண் குழந்தை பிறந்து இருப்பதாகவும் அனுஷ்கா சர்மா மற்றும் குழந்தை இருவரும் நலமாக இருப்பதாகவும் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் டுவிட்டரில் தெரிவிக்கையில், இன்று மதியம் அனுஷ்கா சர்மாவிற்கு பெண் குழந்தை பிறந்து இருப்பதாகவும் அனுஷ்கா சர்மா மற்றும் குழந்தை இருவரும் நலமாக இருப்பதாகவும், மேலும் தன் வாழ்க்கையில் புதிய அத்தியாயத்தில் நுழைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

முன்னதாக அவர் மனைவியின் பிரசவ காலத்திற்காக ஆஸ்திரேலியா தொடரில் பாதியில் நாடு திரும்பிய குறிப்பிடத்தக்கது.

இன்று இந்திய அணி கடுமையான போராட்டத்தினை சந்தித்து ஆட்டத்தை டிரா செய்த மகிழ்ச்சியில் இருந்த இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு விராட் கோலி மேலும் இந்த மகிழ்ச்சியான செய்தியை அளித்துள்ளார்.