சத்குருவிடம் தஞ்சமடைந்த சமந்தா.! இல்லறத்துக்கு குட்பையா.?!

சமந்தா

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வளம் வரும் நடிகை சமந்தா. சமீபத்தில் ஈஷா யோகா மையத்தின் நிறுவனர் சத்குருவை சந்தித்த பின்னர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆன்மிகத்தைப் பற்றி பதிவிட்டு இருப்பது பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

அதில், “ஆன்மீக செயல் முறையின் முழு பயிற்சி என்பது நீங்கள் உங்களுக்குள் வரையறுக்கப்பட்ட எல்லைகளை உடைத்து மகத்தான அனுபவத்தை பார்ப்பதே ஆகும்.

ஆன்மீகத்தின் நோக்கம் என்பது உங்கள் அறியாமையின் விளைவாக நீங்கள் உருவாக்கி வரையறுக்கப்பட்ட அடையாளத்திலிருந்து உங்களை நீங்களே உருவாக்கிக் கொண்டு வாழ்வதுதான் ஆனந்தமான ஒரு எல்லையற்ற பொறுப்பு அறிவு மட்டும் சாதனை அல்ல.

உங்களது புலன்கள் அனைத்தும் ஒரு வெளிப்புற தோற்றத்தை தருகின்றன. ஆனால், உண்மையான வெளிப்புறத்தை நீங்கள் ஒரு போதும் அனுபவித்திருக்க மாட்டீர்கள். நீங்கள் அனுபவிக்கும் அனைத்தும் உங்களுக்குள் இருப்பதை நீங்கள் உணரும்போது நீங்கள் உண்மையாகவே அறிவு ஒளியை பெற்றுள்ளீர்கள்.

என நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சத்குருவோடு எடுத்த புகைப்படத்தை அப்லோடு செய்து இவ்வாறு பதிவிட்டுள்ளார்.