பிக்பாஸ் நிகழ்ச்சியில் அதிக சம்பளம் பெற்ற பிரபலம் யார் தெரியுமா?

பிக்பாஸ் சீசன் 4

 

கொரோனா வைரஸ் காரணமாக இந்த வருடம் பிக்பாஸ் சீசன் 4 மிகவும் தாமதமாக அக்டோபர் மாதத்தில்தான் துவங்கியது. அக்டோபர் 4ஆம் தேதி துவங்கிய பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்களுடன் ஆரம்பித்த நிலையில் கடந்த வாரம் கடைசி எவிக்ஷன் வரை ஒவ்வொருவராக வெளியேறினர்.

இந்த நிலையில் பிக் பாஸ் சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒவ்வொருவருக்கும் எவ்வளவு சம்பளம் என்ற விவரம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகை ரம்யா பாண்டியன் ஒரு நாளுக்கு ரூபாய் 75 ஆயிரம் சம்பளம் வாங்கி வருகிறாரம்.

இதனடிப்படையில் பார்த்தால் 100 நாட்கள் இருக்கும் போட்டியாளர்களில் ஒருவர் முடிவில் 75 லட்சம் சம்பளமாக கிடைக்கும் என்று எதிர்பார்ப்படுகிறது.

அர்ச்சனா, ஷிவானி, ரேகா, கேப்ரில்லா என்று பலருடைய சம்பள விவரம் தற்போது வெளியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை. இருப்பினும் தற்போது இந்த பட்டியல் பரபரப்பை கிளப்பி வருகிறது.