வீதியை கடக்க முற்பட்ட பெண்ணுக்கு நேர்ந்த கதி!

இலங்கை


தம்பலாகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வீதியை கடக்க முற்பட்ட பெண்ணொருவர் மீது டிப்பர் வாகனம் மோ.தியதில் குறித்த பெண் படுகாயமடைந்து அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தம்பலகாமம் 96 ஆம் கட்டைப்பகுதியில் இவ்விபத்துச் சம்பவம் இன்று திங்கட்கிழமை காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். மேலும் முள்ளிப்பொத்தானை 94 கட்டைப்பகுதியைச் சேர்ந்த 65 வயது பெண்ணொருவரே இவ்வாறு விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அத்தோடு குருணாகல் பகுதியிலிருந்து திருகோணமலைக்கு நிலக்கரி வகைகளை ஏற்றுவதற்காக சென்ற டிப்பர் வாகனமே இவ்வாறு வீதியை கடக்க முற்பட்ட பெண் மீது மோ.தியுள்ளதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலும் இந்நிலையில் டிப்பர் வாகனத்தின் சாரதியை கைது செய்து தடுத்து வைத்துள்ளதோடு விபத்துக்குள்ளான டிப்பர் வாகனமும் தம்பலகாமம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளதாகவும் தம்பலகாமம் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

எனினும் விபத்துக்குள்ளான பெண் கந்தளாய் தள வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைபெற்று வருவதோடு மேலதிக விசாரணைகளை தம்பலாகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.