மறுமணம் செய்துகொண்ட மனைவியின் பேச்சை கேட்டு, பச்சிளம் பி.ஞ்சுகளை து.ரத்திய த.ந்தை!

தமிழ்நாடு

தஞ்சாவூர் பகுதியைச் சார்ந்தவர் செல்வம். இவரது மனைவி மீனாட்சி. இவர்கள் இருவருக்கும் 15 வயதில் மகனும், 10 வயதில் மகளும் உள்ளனர். செல்வம் வீடு வீடாக சென்று மிக்ஸி, கிரைண்டர் சரி செய்யும் பணியை செய்து வந்துள்ளார்.

மீனாட்சி பனியன் நிறுவனத்தில் வேலைக்கு சென்று வந்துள்ளார். இவர்கள் திருப்பூர் அருகேயுள்ள பெருதாநல்லூர் பகுதியில் வசித்து வந்த நிலையில், கடந்த 5 வருடங்களுக்கு முன்னதாக சொந்த ஊரான தஞ்சாவூருக்கு சென்றுள்ளனர். இந்த சூழ்நிலையில், கணவன் – மனைவி இ.டை.யே ஏ.ற்.ப.ட்.ட க.ரு.த்.து வே.று.பா.டு கா.ர.ண.மா.க பி.ரி.ந்.த தம்பதிகள், மறுமணமும் செய்து உள்ளனர்.

இந்நிலையில், தந்தை செல்வத்துடன் குழந்தைகள் இருவரும் வசித்து வந்த நிலையில், மறுமணம் செய்துகொண்ட மனைவியின் பேச்சைக் கேட்டு, குழந்தைகள் இருவரையும் தாய் மீனாட்சியிடம் செல்லுமாறு செல்வம் வி.ர.ட்.டி வி.ட்.டு.ள்.ளா.ர்.

இதை தொடர்ந்து குழந்தைகள் இருவரும் தஞ்சாவூரில் பேருந்து ஏறி திருப்பூருக்கு வந்து, கடந்த 5 வருடங்களுக்கு முன்பு தாயுடன் இருந்த பகுதியான வாஷிங்டன் நகர் பகுதியில் நள்ளிரவு நேரத்தில் சென்றுள்ளனர். இருவரும் தாயை தேடி கண்டுபிடிக்க முடியாமல், இரவு நேரத்தில் கடையோராம் தங்கியிருந்த நிலையில், இதனை கண்ட அப்பகுதி வாசியான கருப்பசாமி என்பவர், இருவரையும் தனது வீட்டில் தங்க வைத்துள்ளார்.

பின்னர், இது தொடர்பாக பெருமாநல்லூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், அண்ணன் – தங்கை இருவரிடமும் விசாரணை மேற்கொண்ட நிலையில், தந்தை செல்வத்தின் செல்போனுக்கு தொடர்பு கொண்ட நிலையில், அது அணைக்கப்பட்டு இருந்துள்ளது.

இதனையடுத்து குழந்தைகள் இருவரும் குழந்தைகள் நல காப்பகத்தில் ஒப்படைக்கபட்டுள்ளனர். த.ந்தையால் து.ர.த்.த.ப்.ப.ட்.டு, தாயை தேடி நள்ளிரவில் குழந்தைகள் வந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெ.ரு.ம். அ.தி.ர்.ச்.சி.யை ஏற்படுத்தியுள்ளது.