இன்றைய ராசிபலன்: 13.01.2021: மார்கழி மாதம் 29ம் தேதி: இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன்!

ஜனவரி 13,2021


இன்று!
சார்வரி வருடம், 13.1.2021, மார்கழி 29
புதன்கிழமை, வளர்பிறை, அமாவாசை திதி காலை 11:04 வரை,
அதன்பின் பிரதமை திதி, பூராடம் நட்சத்திரம் காலை 7:01 வரை,
அதன்பின் உத்திராடம் நட்சத்திரம், அமிர்தயோகம்.

நல்ல நேரம் : காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை.
ராகு காலம் : பிற்பகல் 12.00 மணி முதல் பிற்பகல 1.30 மணி வரை.
எமகண்டம் : காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை.
குளிகை : காலை 10.30 மணி முதல் பிற்பகல் 12.00 மணி வரை.
சூலம் : வடக்கு

பரிகாரம் : பால்
சந்திராஷ்டமம் : மிருகசீரிடம்
பொது : போகி

மேஷம்:

தொழில் சம்பந்தமான முக்கிய மாற்றங்களால் அனுகூலம் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் புதுவிதமான சூழல் ஏற்படும். நண்பர்களின் ஆதரவால் பொருளாதார முன்னேற்றம் உண்டாகும். அரசு தொடர்பான பணிகளில் இருந்துவந்த தாமதங்கள் குறையும். புதிய முதலீடுகளில் சற்று சிந்தித்து செயல்படவும்.

ரிஷபம்:

அரசு அதிகாரிகளிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். தொழில் சம்பந்தமான அலைச்சல்கள் அதிகரிக்கும். உறவினர்களின் வருகையால் ஆதரவான சூழல் உண்டாகும். வாகனப் பழுதுகளை சீர் செய்வீர்கள். எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். மனதில் ஆராய்ச்சி தொடர்பான எண்ணங்கள் மேம்படும்.

மிதுனம்:

மற்றவர்களை பற்றிய புரிதல் உணர்வு உண்டாகும். செய்யும் செயல்களின் பலன்கள் காலதாமதமாக கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் கனிவுடன் நடக்கவும். மனதில் தோன்றும் தெளிவற்ற எண்ணங்களால் செயல்களில் காலதாமதம் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் பொறுப்புகள் அதிகரிக்கும்.

கடகம்:

கூட்டாளிகளிடம் ஏற்பட்ட மனக்கசப்புகள் குறையும். எதிர்பாலின மக்களால் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். பணியில் பொறுப்புகள் அதிகரிக்கும். போட்டி தேர்வுகளில் எதிர்பார்த்த சாதகமான முடிவுகள் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் தனவரவுகள் மேம்படும். திருமணம் சம்பந்தமான சுபச்செயல்கள் கைகூடும்.

சிம்மம்:

உத்தியோகஸ்தர்களுக்கு உயர்வான வாய்ப்புகள் கிடைக்கும். குடும்ப நபர்களிடம் விட்டுக்கொடுத்து செல்வதன் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். மனதில் தோன்றும் தேவையற்ற எண்ணங்களால் சோர்வு உண்டாகும். கலைஞர்களுக்கு திறமைகளை மேம்படுத்துவதற்கான சூழல் அமையும். சிறு அலைச்சலுக்கு பின்பு உதவிகள் கிடைக்கும்.

கன்னி:

ஆன்மிக எண்ணங்கள் மேலோங்கும். நெருங்கிய உறவினர்களிடம் கவனத்துடன் பேசவும். கால்நடைகளால் இலாபம் உண்டாகும். பயணங்களில் நிதானம் வேண்டும். ஆடைச்சேர்க்கை உண்டாகும். மனை சார்ந்த செயல்பாடுகளில் இலாபம் ஏற்படும். உறவினர்களின் மூலம் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

துலாம்:

பெரியோர்களின் ஆதரவு கிடைக்கும். வாகனப் பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் திருப்தியான சூழல் உண்டாகும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும்.

விருச்சகம்:

நினைத்த செயல்களை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். பணி உயர்விற்கான முயற்சிகள் கைகூடும். எதிர்பார்த்த தனவரவுகளில் இருந்துவந்த இழுபறிகள் நீங்கும். உத்தியோகத்தில் உள்ள மறைமுக எதிர்ப்புகள் குறையும். சொத்துக்கள் சம்பந்தமான பிரச்சனைகளில் சுமூகமான முடிவுகள் கிடைக்கும்.

தனுசு:

வர்த்தகத்தில் எதிர்பார்த்த சுபச்செய்திகள் கிடைக்கும். பயணங்களால் இலாபம் உண்டாகும். தலைமை அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். தொழிலில் உள்ள போட்டிகளை சமாளிப்பீர்கள். மனதில் புதுவிதமான எண்ணங்கள் தோன்றும். பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும்.

மகரம்:

தொழிலை விரிவுப்படுத்துவதற்கான முயற்சிகள் அதிகரிக்கும். தேவையற்ற பேச்சுக்களை குறைப்பதால் சாதகமான செயல்கள் நடைபெறும். வெளியூர் பயணங்களில் சில இடையூறுகள் தோன்றி மறையும். அரசு பணிகளில் எதிர்பார்த்த ஆதாயம் உண்டாகும். புதிய இலக்கை நிர்ணயம் செய்வீர்கள்.

கும்பம்:

பணியில் இருந்துவந்த இடர்பாடுகள் குறையும். நண்பர்களுடன் கேளிக்கையில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். குடும்ப உறுப்பினர்களிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் நீங்கி ஒற்றுமை மேலோங்கும். நிலுவையில் இருந்துவந்த தனவரவுகள் கிடைக்கும். சுபச்செய்திகளால் மகிழ்ச்சியும், அலைச்சலும் ஏற்படும்.

மீனம்:

வியாபாரத்தில் புதிய நபர்களால் எதிர்பார்த்த இலாபம் உண்டாகும். உயர் பதவியில் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும். எண்ணிய பணிகளை முடிப்பதற்கு சிறு அலைச்சல்கள் உண்டாகும். பிள்ளைகளின் செயல்பாடுகளில் கவனம் வேண்டும். உடன்பிறந்தவர்களின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும்.