நடிகை ராய் லட்சுமிக்கு கொரோனா.! வெளியான தகவல்.!

ராய் லட்சுமி

இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா நோய்த்தொற்று அதிகரித்துக் கொண்டே வந்தது. மத்திய- மாநில அரசுகளின் பல்வேறு கட்டுப்பாடுகளால் இந்த கொரோனா நோய்த்தொற்று பலமடங்கு குறைந்துள்ளது.

நாட்டில் ஒரு கட்டத்தில் நாள் ஒன்றுக்கு ஒரு லட்சம் பேர் பாதிக்கப்பட்ட இருந்த நிலை மாறி, தற்போது 10,000 -15,000 கொரோனா நோய்த்தொற்று பாதிப்பு கண்டறியப்படுகிறது. அதே சமயத்தில் நோய் தொற்று கண்டுபிடிக்கும் பரிசோதனை முறைகளையும் இந்திய அரசு அதிகரித்து.

தற்போது கொரோனா நோய்த்தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த நோய்க்கான தடுப்பூசி ஒத்திகை நாடு முழுவதும் நடத்தியுள்ளது. விரைவில் அனைவருக்கும் தடுப்பூசிகள் போடப்படும்.

இதற்கிடையே, இந்த நோய் தொற்றுக்கு சாதாரண பொதுமக்கள் மட்டுமில்லாமல், மக்கள் பிரதிநிதிகளான சட்டமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாநிலங்களவை உறுப்பினர்கள், முதலமைச்சர்கள், அமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல மொழிகளில் கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கும் ராய் லட்சுமிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் கடந்த ஒரு வாரமாக அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும், ஒரு சில தினங்களில் பூரண குணமடைந்து விடுவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.