பிக்பாஸ் போட்டியாளர்களில் ஆரிக்கு 5வது இடம்: சற்றுமுன் வெளியான அதிர்ச்சி தகவல்!

ஆரி

பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் 4வது சீசனின் இறுதிப்போட்டி இன்னும் ஓரிரு நாட்களில் நடைபெற உள்ளது என்பதும் இந்த இறுதிப் போட்டிக்கு 6 பேர் தகுதி பெற்றுள்ளனர் என்பது தெரிந்ததே. ஆரி, சோம், கேபி, ரம்யா, பாலாஜி மற்றும் ரியோ ஆகிய 6 பேர்களில் டைட்டில் வின்னர் யார் என்பது இன்னும் ஓரிரு நாட்களில் தெரிந்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழில் மட்டுமன்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்திய மொழிகளிலும் இந்தி உள்பட பல்வேறு மொழிகளில் நடத்தப்பட்டு வருகிறது என்பதும் அனைத்து மொழிகளிலும் இந்த நிகழ்ச்சி பிரபலமானது என்பதும் தெரிந்ததே அந்த வகையில் தற்போது அகில இந்திய அளவில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபலமான போட்டியாளர் யார் என்பது குறித்த ஒரு கருத்துக்கணிப்பு எடுக்கப்பட்டது.

இதில் பிக்பாஸ் தமிழ் போட்டியாளரான ஆரிக்கு அகில இந்திய அளவில் 5வது இடம் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர் ஒருவர் அகில இந்திய அளவில் 5வது இடம் பெற்றுள்ளது தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கே ஒரு பெருமை என்பது மட்டுமின்றி ஆரியின் ஆர்மியினர் தங்களது காலரை தூக்கிக்கொண்டு இதனை கொண்டாடலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து ஆரிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் அகில இந்திய அளவில் புகழ்பெற்ற போட்டியாளர்களின் முதல் 6 பேர்களின் விவரங்கள் பின்வருமாறு:

1. சித்தார்த் சுக்லா
2. அபிஜித்
3. ஆசிம் ரியாஸ்
4. ஷெனாஜ் கில்
5. ஆரி அர்ஜூனன்
6. ரூபினா திலைக்