பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய கேப்ரில்லா.?! பிக்பாஸ் ரசிகர்களுக்கு அதிர்ச்சித் தகவல்.!

பிக்பாஸ்

தமிழர்கள் கொண்டாடும் முக்கிய விழாவான பொங்கல் திருநாளை முன்னிட்டு விஜய் டிவி பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டை விளையாடி கொண்டாடி வருகின்றனர்.

பிக்பாஸ் சீசன் நான்காவது நிகழ்ச்சி அக்டோபர் மாதத்தில் துவங்கி, தற்போது இரண்டாவது நாளாக நடைபெற்று வருகிறது. விரைவில், இந்த நிகழ்ச்சியை முடிவுக்கு வர இருக்கின்ற நிலையில், பிக்பாஸ் வீட்டிற்குள் ஆரி, பாலாஜி முருகதாஸ், கேப்ரில்லா, ரம்யா மற்றும் ரியோ ஆகிய 6 போட்டியாளர்கள் மட்டும் தற்போது போட்டியில் இறுதியாக இருக்கின்றனர்.

இறுதி கட்டத்தை எட்டியுள்ள நேரத்தில் விருந்தினர்களாக பழைய போட்டியாளர்கள் உள்ளே வந்து சென்றனர். ஒவ்வொரு சீசனிலும் இறுதிப்போட்டிக்கு சில நாட்களுக்கு முன்பாக ஒரு குறிப்பிட்ட தொகையை வைத்து இப்பொழுதே பணத்தைப் பெற்றுக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறலாம் என அறிவிப்பு வெளியாகும்.

இன்றைய ப்ரோமோவில் இது காட்டப்பட்டது. இத்தகைய சூழலில், பிக் பாஸ் வீட்டில் இருந்து ஐந்து லட்ச ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு வெளியேறிவிட்டதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

இதன் உண்மைத்தன்மையை பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒளிபரப்பு செய்யும் பொழுது தான் அறிய முடியும்.