விரக்தியின் உச்சத்திற்கு சென்ற சுரேஷ் தாத்தா.! செய்த செயலால் ரசிகர்கள் சோகம்.!

சுரேஷ் சக்கரவர்த்தி
இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் வெளியேறிய போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் திங்கட்கிழமை முதல் ரீஎண்ட்ரி கொடுத்து வருகின்றனர். சமீபத்தில் வெளியேறிய ஷிவானி மட்டும் இன்னமும் வீட்ட்டிற்குள் செல்லவில்லை.

அக்டொபர் மாதம் துவங்கிய பிக்பாஸ் சீசன் நான்கில் முக்கியமானவராக பார்க்கப்பட்ட நடிகர் சுரேஷ் சக்கரவர்த்தி மீண்டும் எப்போது பிக்பாஸ் வீட்டிற்கு வருவார் என்று ரசிகர்கள் எதிர்ப்பார்த்து காத்துள்ளனர்.


இதுகுறித்து பிக்பாஸ் ரசிகர்கள் அவரது ட்வீட்டர் பக்கத்தில் டேக் செய்து கேள்வி எழுப்பிய நிலையில், அவர் பிக்பாஸ் வீட்டிற்கு அழைக்கப்பதை ஒரே போட்டியாளர் நான் மட்டும் தான் என்றும், இன்னும் அழைப்பு வரவில்லை வந்ததும் நிச்சயம் செல்வேன் என்றும் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.


தொடர்ந்து இரண்டாம் முறையாக அடுத்தகட்ட போட்டியாளர்கள் வீட்டிற்குள் சென்று வந்த நிலையில், நேற்று சுரேஷ் மீண்டும் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘என்னமொ நடக்குது., ஒண்ணுமே புரியல.’ எனும் பாடலை பதிவிட்டு மீண்டும் தான் அவமதிக்கப்பட்டதாக கூறியுள்ளார்.