10 வயது சிறிய கணவரால், வாழ்வில் பிரச்சனையா.!? முதல்முறையாக மனம்திறந்த பிரியங்கா.!

பிரியங்கா சோப்ரா

பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, ஒரு இந்திய நடிகை மற்றும் முன்னாள் உலக அழகி ஆவார். இவர் சினிமாவிற்கு வருவதற்கு முன்னர் மாடலாக பணியாற்றினார்.

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் பிரியங்கா சோப்ரா. தமிழ் சினிமாவில் தமிழன் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து பிரபலமானார். சமீபத்தில் இவருக்கும் அமெரிக்க பாடகர் நிக் ஜோன்ஸிர்க்கும் திருமணம் நடைபெற்றது.

திருமணம் முடிந்ததில் இருந்து பிரியங்கா பல நாடுகளுக்கு தன் கணவருடன் இன்ப சுற்றுலா சென்று வருகின்றார். பிரியங்கா சோப்ரா திருமணத்திற்கு பின்பும் அவ்வபோது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்குபவர்.

தனது கணவர் குறித்து பிரியங்கா சோப்ரா பலமுறை கருத்துகள் தெரிவித்து இருக்கின்றார். திருமணமாகி இரண்டு வருடங்கள் ஆகிய நிலையில் 38 வயதான பிரியங்கா, 28 வயதான தனது கணவர் குறித்து தற்போது மனம் திறந்து சில விஷயங்களை பகிர்ந்து இருக்கின்றார்.


அதில், “எனது கணவர் தண்ணீரில் இருக்கும் மீன் போல. இந்திய கலாச்சாரத்தை பற்றி கொண்டவராக இருக்கிறார். வயது வித்தியாசம் தங்களுக்கு இடையே குடும்ப வாழ்க்கைக்கு எந்தவிதத்திலும் தடையாக இல்லை.

தங்களுடைய உறவு கடினமாக ஒன்றும் இல்லை. சாதாரண ஜோடி போலவே ஒருவருக்கு ஒருவர் தங்களுடைய பழக்க வழக்கத்தையும், விருப்பங்களையும் புரிந்துகொண்டு செயல்படுகிறோம்.” என்று கூறியுள்ளார்.