பாண்டியன் ஸ்டோர் நடிகையின் கணவர் புகைப்படம்.! இவர் தான் அந்த காதல் மன்னனா?!

ஹேமா

பிரபல தனியார் தொலைக்காட்சி சானலில் ஒளிபரப்பாகி மிகவும் ரசிக்கத்தக்க சீரியலாக இருப்பது பாண்டியன் ஸ்டோர்ஸ்.

580 எபிசோட்களை கடந்து சென்று வெற்றியுடன் சென்று கொண்டிருக்கும் இந்த சீரியல் சமீபத்தில் மிகப்பெரிய பிரச்சனைக்கு ஆளானது.

அதற்கு காரணம் இந்தத் தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை சி.த்ரா த.ற்.கொ.லை செ.ய்து கொண்டதுதான். அதன் பின்னர், யார் முல்லையாக சீரியலில் நடிக்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கிய நிலையில், நடிகை காவியா அந்த கதாபாத்திரத்தில் தற்போது நடித்து வருகின்றார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை ஹேமா. மீனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஹேமாவுக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்தது. இவரது குழந்தை புகைப்படத்தை இணையதளத்தில் அவர் வெளியிடவில்லை.

இந்த நிலையில், முதல் முறையாக தனது கணவருடன் இருக்கும் புகைப்படத்தை தற்போது மீனா வெளியிட்டு இருக்கின்றார். அந்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைராகி வருகின்றது.