வாலிபர்களை கதறக்கதற அழவைத்த போட்டி.. கெத்து காண்பிப்பதாக நினைத்து கதறிய வாலிபர்கள்.!

தமிழகம்

தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை கலைகட்டியுள்ளது. பல்வேறு கிராமங்களில் விதவிதமான விளையட்டுப்போட்டிகளும் நடைபெற்றது. பொதுவாக பொங்கல் போட்டிகள் என்றாலே பலரை மகிழ்விற்கு உள்ளாக்கும் போட்டிகள் அதிகளவில் நடைபெறுவது வழக்கமான ஒன்று.

 

இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் காயாமொழியில் வித்தியாசமான போட்டியொன்று நடைபெற்று முடிந்துள்ளது. இந்த போட்டியின் விதிமுறையாக, முதலில் 10 பச்சை மிளகாயை சாப்பிட வேண்டும். பின்னர் தோள்கள் நீக்கப்பட்ட கற்றாழையை சாப்பிட்டு, எலுமிச்சை பழத்தில் பாதியையும், சர்க்கரையையும் சாப்பிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இதனையடுத்து வாலிபர்கள் 8 பேர் நெஞ்சை நிமிர்த்தி போட்டியில் பங்கேற்க, இரண்டாவது மிளகாய் வாய்க்குள் சென்றதும் கண்களில் நீர் வழிய துவங்கிவிட்டது. பெண்களை மயக்க மிளகாயை சாப்பிட சென்ற பலரும், பெண்களை சிரிக்க வைத்துவிட்டனர்.

இதனால், வாலிபர்கள் கண்ணீரில் ததும்ப, இவர்களின் அளப்பறையை கண்டு அஞ்சிய பலரும் சிரிப்பலைகளை ஏற்படுத்தினர். இதனையடுத்து சுபாஷ் என்ற வாலிபர், ஒரு நொடியில் 7 மிளகாயை சாப்பிட்டு வெற்றிவாகை சூடினார்.