இன்றைய ராசிபலன்: 17.01.2021: தை மாதம் 4ம் தேதி: இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன்!

ஜனவரி 17,2021


இன்று!
சார்வரி வருடம், தை 4, 17.1.2021, ஞாயிற்றுக்கிழமை,
வளர்பிறை, சதுர்த்தி திதி காலை 10:26 வரை,
அதன்பின் பஞ்சமி திதி, சதயம் நட்சத்திரம் காலை 8:30 வரை,
அதன்பின் பூரட்டாதி நட்சத்திரம், சித்தயோகம்.

நல்ல நேரம் : காலை 7.31 மணி முதல் காலை 9.00 மணி வரை.
ராகு காலம் : மாலை 4.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை.
எமகண்டம் : பிற்பகல் 12.00 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை.
குளிகை : பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை.
சூலம் : மேற்கு

பரிகாரம் : வெல்லம்
சந்திராஷ்டமம் : ஆயில்யம்.
பொது : ராமர் வழிபாடு

மேஷம்: வியாபாரம் தொடர்பான பணிகளில் இருந்துவந்த இழுபறிகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும். உயர் அதிகாரிகளின் ஆதரவுகளால் செயல்பாடுகளில் இருந்துவந்த தடை, தாமதங்கள் அகலும். ஆன்மிகம் தொடர்பான செயல்பாடுகளில் ஈடுபாடு ஏற்படும். எதிர்பாராத திடீரென நிகழும் சில நிகழ்வுகளின் மூலம் அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

அஸ்வினி : சுபிட்சம் உண்டாகும்.

பரணி : தாமதங்கள் அகலும்.

கிருத்திகை : அதிர்ஷ்டகரமான நாள்.

ரிஷபம்: அரசியல் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு உடனிருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும். உடல் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். விவசாயம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மை உண்டாகும். குடும்ப உறுப்பினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை ஏற்படும். நீண்ட நாட்களாக நினைத்த ஆசைகள் நிறைவேறும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

கிருத்திகை : ஆதரவு கிடைக்கும்.

ரோகிணி : புத்துணர்ச்சியான நாள்.

மிருகசீரிஷம் : ஆசைகள் நிறைவேறும்.

மிதுனம்: இறைவழிபாடு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். பெற்றோர்களின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். உற்பத்தி தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு அலைச்சல்கள் ஏற்பட்டாலும் இலாபம் உண்டாகும். குழந்தைகளின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் ஆதரவு மூலம் நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்துவந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

மிருகசீரிஷம் : விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.

திருவாதிரை : இலாபம் உண்டாகும்.

புனர்பூசம் : தீர்வுகள் கிடைக்கும்.

கடகம்: தந்தையிடம் தேவையற்ற கருத்துக்களை பகிர்வதை தவிர்ப்பது நல்லது. முயற்சிக்கேற்ப எதிர்பார்த்த சில முடிவுகள் காலதாமதமாக ஏற்படும். நண்பர்களின் மூலம் அலைச்சல்கள் உண்டாகும். வழக்கு தொடர்பான பணிகளில் இழுபறியான சூழ்நிலைகள் காணப்படும். எதிலும் பொறுமையுடன் செயல்பட வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

புனர்பூசம் : காலதாமதம் ஏற்படும்.

பூசம் : அலைச்சல்கள் உண்டாகும்.

ஆயில்யம் : பொறுமை வேண்டும்.

சிம்மம்: தவறிய சில பொருட்கள் மீண்டும் கிடைக்கும். மனதில் நினைத்த காரியங்களை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். உத்தியோகம் தொடர்பான பணிகளில் சக ஊழியர்களின் எதிர்பாராத ஆதரவு கிடைக்கும். காப்பீடு தொடர்பான பணிகளில் புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மேன்மை உண்டாகும். நெருக்கமானவர்களிடம் மற்றவர்கள் பற்றிய கருத்துக்களை பகிர்வதை தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

மகம் : எண்ணங்கள் ஈடேறும்.

பூரம் : ஆதரவு கிடைக்கும்.

உத்திரம் : மேன்மை உண்டாகும்.

கன்னி: சுபகாரியங்கள் தொடர்பான முயற்சிகளில் இருந்துவந்த தடை, தாமதங்கள் அகலும். ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். உத்தியோகம் தொடர்பான வெளியூர் பயணங்கள் சாதகமாக அமையும். உறவினர்களின் மூலம் ஆதரவும், ஆலோசனைகளும் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

உத்திரம் : தாமதங்கள் அகலும்.

அஸ்தம் : ஒற்றுமை அதிகரிக்கும்.

சித்திரை : மாற்றமான நாள்.

துலாம்: உத்தியோகத்தில் புதிய முயற்சிகளுக்கு பாராட்டுகளும், முக்கியத்துவமும் கிடைக்கும். புதிய முயற்சிகள் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். கலை தொடர்பான பணிகளில் ஆர்வம் ஏற்படும். வாகன மாற்றம் தொடர்பான எண்ணங்கள் மேம்படும். மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். கணிதம் தொடர்பான பணிகளில் ஈடுபாடு உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

சித்திரை : பாராட்டுகள் கிடைக்கும்.

சுவாதி : ஆர்வம் ஏற்படும்.

விசாகம் : தெளிவு பிறக்கும்.

விருச்சகம்: வாக்குவன்மையினால் சில காரியங்களை செய்து முடிப்பீர்கள். செயல்பாடுகளில் துரிதம் காணப்படும். அவ்வப்போது சிறு சிறு வதந்திகள் ஏற்பட்டு மறையும். மனதில் தோன்றும் எண்ணங்களை செயல்வடிவில் மாற்றுவது தொடர்பான முயற்சிகள் அதிகரிக்கும். ஆவணம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு பொருள் ஆதாயம் கிடைக்கும். புதிய தொழில்நுட்பம் சார்ந்த கருவிகளின் மூலம் அனுகூலமான சூழ்நிலைகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

விசாகம் : துரிதம் உண்டாகும்.

அனுஷம் : முயற்சிகள் அதிகரிக்கும்.

கேட்டை : அனுகூலமான நாள்.

தனுசு: பழக்கவழக்கங்களில் மாற்றங்கள் ஏற்படும். தனம் தொடர்பான செயல்பாடுகளில் திருப்தியான சூழ்நிலைகள் காணப்படும். உடல் ஆரோக்கியம் மேம்படும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் சாதகமாகும். கமிஷன் அடிப்படையிலான தொழிலில் இருப்பவர்களுக்கு மேன்மை உண்டாகும். பாகப்பிரிவினை தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

மூலம் : மாற்றமான நாள்.

பூராடம் : ஆரோக்கியம் மேம்படும்.

உத்திராடம் : தீர்வு கிடைக்கும்.

மகரம்: சிறு தூரப் பயணங்களின் மூலம் மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். வீடு விற்பது தொடர்பான முயற்சிகள் ஈடேறும். வாகனப் பயணங்களில் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும். உடன்பிறந்தவர்களின் மூலம் ஆதரவான சூழ்நிலைகள் அமையும். தைரியத்துடன் புதிய முடிவுகளை எடுப்பீர்கள். வியாபாரம் தொடர்பான செயல்பாடுகளில் முதலீடுகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : கருநீலம்

உத்திராடம் : தெளிவு பிறக்கும்.

திருவோணம் : முயற்சிகள் ஈடேறும்.

அவிட்டம் : முதலீடுகள் அதிகரிக்கும்.

கும்பம்: மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கனிவான பேச்சுக்களின் மூலம் தடைபட்ட காரியங்களை செய்து முடிப்பீர்கள். அவ்வப்போது பார்வை தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டு மறையும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தானியம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு இலாபம் அதிகரிக்கும். எதிர்காலம் தொடர்பான புதிய சிந்தனைகளையும், கொள்கைகளையும் உருவாக்குவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

அவிட்டம் : பொருட்சேர்க்கை உண்டாகும்.

சதயம் : உதவிகள் கிடைக்கும்.

பூரட்டாதி : இலக்குகளை நிர்ணயிப்பீர்கள்.

மீனம்: வியாபாரம் தொடர்பான பணிகளில் நிர்வாகத்திறமை அதிகரிக்கும். புதிய ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் மேம்படும். வாகன வசதிகள் அதிகரிக்கும். மனதில் நினைத்த செயல்கள் சிறு அலைச்சலுக்கு பிறகு எண்ணிய விதத்தில் நிறைவேறும். வெளிவட்டாரங்களில் மதிப்புகள் அதிகரிக்கும். உடனிருப்பவர்களுக்கிடையே தனிப்பட்டு காணப்படுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

பூரட்டாதி : நிர்வாகத்திறமை அதிகரிக்கும்.

உத்திரட்டாதி : சிந்தனைகள் மேம்படும்.

ரேவதி : மதிப்புகள் அதிகரிக்கும்.