ஆரிக்கு வாழ்த்து, ஆனா சேரனுக்கு பிடித்தது இவர் தானாம்.!

பிக்பாஸ்

தனியார் தொலைக்காட்சியில் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி நான்காவது சீசன் அக்டோபர் 4ஆம் தேதி துவங்கியது. இதில் 16 போட்டியாளர்கள் பங்கேற்ற நிலையில் ஆரி, பாலா, சோம், ரியோ, ரம்யா போன்ற ஐந்து போட்டியாளர்கள் இறுதியாக தேர்வு செய்யப்பட்டனர்.

இவர்களில் ஆரி அர்ஜுனன் அதிக வாக்குகளை பெற்றுவெற்றி பெற்றார். வெற்றி பெற்ற ஆரிக்கு அவருடைய ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் என்று பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். முன்னாள் பிக்பாஸ் போட்டியாளரும், சினிமா துறை இயக்குனருமான சேரன் வெற்றி பெற்ற ஆரிக்கு தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்.

தொடர்ந்து, பிக்பாஸ் நான்கில் ரன்னராக வெற்றி பெற்று இரண்டாம் இடத்தை பிடித்த பாலாஜியின் உண்மை முகமும், எதையும் சுலபமாக கடந்து செல்லும் மற்றும் தன்னை மாற்றிக்கொள்ளும் குணமும், பக்குவப்பட பக்குவப்பட அவர் வாழ்க்கையில் நிச்சயம் உயர்வார் வாழ்த்துக்கள் பாலாஜி” என்று குறிப்பிட்டு இருக்கின்றார்.