இது நெப்போலியன் இல்லையாம். வைரல் புகைப்படத்தின் அதிரவைத்த பின்னணி.!

நெப்போலியன்

 

தமிழ் சினிமாவில் நல்ல உயரத்திற்கேற்ற எடை மற்றும் தோற்றம் உடைய நெப்போலியன் 1991 ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் புதுநெல்லு புதுநாத்து என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் தமிழில் 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாமல் மற்ற மொழி மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.

தமிழ் சினிமாவில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய நடிகர்களில் நெப்போலியனுக்கு தனி இடம் உண்டு. சிறந்த கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வரும் இவர் நடிப்பைப் போலவே, தனது தொழிலிலும் மிகுந்த ஈடுபாடுடன் USAவில் நடத்திவருகிறார்.

அவ்வப்பொழுது தமிழ் சினிமாவின் பக்கம் தலைகாட்டும் நெப்போலியன், கடைசியாக சீமராஜா திரைப்படத்திற்கு பிறகு தமிழில் நடிக்கவில்லை. இதுவரை 2 ஹாலிவுட் திரைப் படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார்.

இந்நிலையில் தனது ஐந்து சகோதரர்களுடன் நெப்போலியன் இருக்கும் புகைப்படத்தில் அவரது சகோதரர் ஒருவர் நெப்போலியனை போலவே இருப்பதால் இணையத்தில் ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.