பிக்பாஸ் நிகழ்ச்சியால் மிகவும் பரிதாப நிலை.! நடிகைக்கு ஏற்பட்ட சோகம்.!

பிக் பாஸ் சீசன் 4

பிக் பாஸ் சீசன் நான்காவது நிகழ்ச்சி கடந்த அக்டோபர் மாதம் நான்காம் தேதி துவங்கியது. கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக மிகவும் தாமதமாக துவங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி, மற்ற சீசன்களை போல அல்லாமல் ஒவ்வொரு எபிசோடும் மிக பொறுமையாகவும், சுவாரசியம் குறைவாகவும் சென்றது.

16 போட்டியாளர்களுடன் துவங்கிய இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போதைய சீசனில் சீக்ரெட் ரூம் இருப்பதையே மக்களை மறக்கும் அளவிற்கு ஆக்கிவிட்டனர். மேலும், போட்டியாளர்களும் அவ்வளவு சுவாரசியமாக கேமை ஆடவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டது.

இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பலர் அடையாளம் காணப்படுவர். ஆனால் ஒரு சிலரோ பிக் பாஸ் வீட்டிற்கு வந்த பின்னர் மக்களால் நெகட்டிவ் விமர்சனங்களை பெற்று கேரியரை இழப்பது வழக்கம்.

அந்தவகையில் பிக்பாஸ் அர்ச்சனா இந்த சீசனில் அனைவரும் வெறுக்கும் முக்கிய நபராக இருந்தார்.

அன்பு கேங் என்று கூறி பலரையும் எமோஷனலாக அடிமைப்படுத்த துடித்த அர்ச்சனாவை கண்டாலே அனைவருக்கும் எரிச்சலாக தான் இருந்தது. இந்நிலையில், விட் ஆனபின்பு பிக் பாஸ் வீட்டில் இருந்த பொழுது அர்ச்சனா எனது கேரியரை போய்விட்டது என்று புலம்பிக் கொண்டு சோகமாக இருந்தார். இது குறித்து பல பேட்டிகளிலும் தனது சமூக வலைதள பக்கம் பக்கங்களிலும் மனக்குமுறலை வெளிப்படுத்தி வருகின்றார்.