விஷாலின் காதலிக்கு கிரிக்கெட் வீரருடன் திருமணம்.?! காதல் கைகூடுமா.!?

வரலட்சுமி

சரத்குமாரின் மகள் வரலட்சுமி விரைவில் கிரிக்கெட் வீரர் ஒருவரை திருமணம் செய்து கொள்ள போவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. கடந்த 20012ம் ஆண்டு வெளியான போடா, போடி என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர்.

தொடர்ந்து, தாரை தப்பட்டை, சண்டகோழி, நீயா2 சர்க்கார் உள்ளிட்ட படங்களில் அவர் நடித்தார். அதன் பின்னர், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பிரபலமானார். தற்போது இவர் வெல்வெட் நகரம் மற்றும் தேனி ஆகிய படங்களில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றார்.

இதற்கிடையில் நடிகர் விஷாலை அவர் காதலித்து இந்த காதல் திருமணம் வரை சென்று நின்றது. தொடர்ந்து, விஷாலுக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டு அதுவும் நின்று போனது.

இத்தகைய சூழலில் தற்போது நடிகை வரலட்சுமி கிரிக்கெட் வீரர் ஒருவருடன் பழகி வருவதாகவும்,

விரைவில் இருவீட்டார் சம்மதத்துடன் இந்த திருமணம் நடக்க இருப்பதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது.