நடிகை மீனாவா இது.!? கம்பேக் கொடுத்து வெளியிட்ட அசத்தல் புகைப்படம்.!

மீனா

இன்று வரை தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமாக இருக்கும் நடிகைகளில் ஒருவர் மீனா. இவர் 90 காலகட்டங்களில் படு பிஸியாக படங்களில் நடித்து வந்தார். இளைஞர்களின் கனவுக் கன்னியாக வலம் வந்த மீனா திருமணம் ஆன பின்பு குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டார்.

எனவே நடிப்பிற்கு பிரேக் போட்ட அவர் தற்போது நீண்ட இடைவெளிக்கு பின்னர், சூப்பர்ஸ்டாரின் அண்ணாத்த படத்தில் தற்போது நடித்து வருகின்றார். மீனாவின் மகள் நைனிகா தளபதி விஜயின் தெறி படத்தில் அவருக்கு மகளாக நடித்து இருப்பார்.

இதனால் தமிழ் சினிமாவில் அவர் பிரபலமாகிவிட்டார். தெறி படத்தில் திறமையான, அழகான நடிப்பால் பலராலும் பாராட்டப்பட்டார்.

அத்துடன் அவரது திறமையான நடிப்பு படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

இந்நிலையில், நடிகை மீனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அழகாக மேக்கப் போட்டுகொண்டு சமீபத்தில் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு கம்பேக் கொடுத்துள்ளார். இது தற்போது ரசிக்கப்பட்டு வருகின்றது.