பிக்பாஸ் கொண்டாட்டத்தில் கவின் லாஸ்லியா.! கொண்டாடும் ரசிகர்கள்.!

லாஸ்லியா

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கமலஹாசன் 4 சீசன் களாக தொகுத்து வழங்கி வருகின்றார். சமீபத்தில்தான் பிக்பாஸ் நிகழ்ச்சி நான்காவது செய்யும் முடிவடைந்தது. இதில் டைட்டில் வின்னராக ஆரி அர்ச்சுனன் வெற்றி பெற்றார்.

தொடர்ந்து, இரண்டாவது இடத்தைப் பாலாஜி முருகதாஸ் பிடித்தார். இதை கொண்டாடும் விதமாக பார்ட்டி வைத்து பிக்பாஸ் போட்டியாளர்கள் கொண்டாடி இருக்கின்றனர். இதில் பிக்பாஸ் போட்டியாளர்கள் மட்டுமல்லாமல் திரையுலக நட்சத்திரங்கள் சிலரும் கலந்துகொண்டனர்.

மேலும் பிக் பாஸ் சீசன் 3-ஆவது போட்டியாளர்களான கவின் மற்றும் லாஸ்லியா இருவரும் இந்த பார்ட்டியில் கலந்து கொண்டு இருக்கின்றனர்.

இருவரும் தனித்தனியாக ஆஜித்துடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது இணையப்பக்கத்தில் பகிர்ந்து இருக்கின்றனர். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.