இன்றைய ராசிபலன்: 21.01.2021: தை மாதம் 8ம் தேதி: இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன்!

ஜனவரி 21,2021


இன்று!
சார்வரி வருடம், தை 8, 21.1.2021, வியாழக்கிழமை,
வளர்பிறை, அஷ்டமி திதி மாலை 5:03 வரை,
அதன்பின் நவமி திதி, அசுவினி நட்சத்திரம் மாலை 4:58 வரை,
அதன்பின் பரணி நட்சத்திரம், அமிர்த – சித்தயோகம்.

நல்ல நேரம் : காலை 10.30 மணி முதல் காலை 12.00 மணி வரை.
ராகு காலம் : பிற்பகல் 1.30 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை.
எமகண்டம் : காலை 6.00 மணி முதல் காலை 7.30 மணி வரை.
குளிகை : காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை.
சூலம் : தெற்கு

பரிகாரம் : தைலம்
சந்திராஷ்டமம் : உத்திரம், அஸ்தம்
பொது : பைரவர் வழிபாடு.

மேஷம்:

திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். உடல் தோற்றப்பொலிவில் சிறு மாற்றங்கள் உண்டாகும். செயல்பாடுகளின் தன்மைகளை அறிந்து செயல்படவும். ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். அதிகார பதவிகளில் இருப்பவர்கள் பொறுமையுடன் செயல்படவும்.

ரிஷபம்:

நண்பர்களுடன் கேளிக்கைகள் தொடர்பான செயல்பாடுகளில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். புதிய முதலீடுகள் தொடர்பான எண்ணங்கள் மேம்படும். நெருக்கமானவர்களின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். புதிய பயணங்களின் மூலம் மனதில் மாற்றங்கள் ஏற்படும். சுபகாரியங்கள் தொடர்பான செயல்பாடுகளில் அலைச்சல்கள் உண்டாகும்.

மிதுனம்:

உத்தியோகம் தொடர்பான பணிகளில் மேன்மையான சூழல் உண்டாகும். சகோதரர்களின் ஆதரவு கிடைக்கும். செயல்பாடுகளில் இருந்துவந்த தடைகளை அறிந்து கொள்வீர்கள். கடினமான செயல்களையும் எளிமையாக செய்து முடிப்பீர்கள். எதிர்பாலின மக்களின் மூலம் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும்.

கடகம்:

அரசாங்கம் தொடர்பான செயல்பாடுகளில் அனுகூலமான சூழல் உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் இலாபம் ஏற்படும். தொழில் வகை போட்டிகளில் இருந்துவந்த பிரச்சனைகள் குறையும். தம்பதிகளுக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். பிள்ளைகளின் மூலம் சுபச்செய்திகள் கிடைக்கும்.

சிம்மம்:

உறவினர்களுக்கிடையே செல்வாக்கு மேம்படும். உத்தியோகஸ்தர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். குடும்ப பெரியோர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். துணிச்சலுடன் புதிய செயல்களில் ஈடுபட்டு இலாபம் அடைவீர்கள். சொத்துக்கள் தொடர்பான விவகாரங்களில் சாதகமான முடிவுகள் கிடைக்கும்.

கன்னி:

செயல்பாடுகளில் மந்தத்தன்மை உண்டாகும். மறைமுகமான தடைகளின் மூலம் காலதாமதம் ஏற்படும். மின்சாதன பொருட்களில் கவனம் வேண்டும். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் விவகாரங்களில் தலையிடுவதை தவிர்க்கவும். சகோதரர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும்.

துலாம்:

வியாபாரத்தில் தனவரவுகள் மேம்படும். உறவினர்களின் வருகையினால் மகிழ்ச்சி உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். பொன், பொருள் சேர்க்கை சிலருக்கு ஏற்படும். போட்டிகளில் ஈடுபட்டு பரிசுகளை பெறுவீர்கள். மாணவர்களின் நினைவாற்றல் மேம்படும். எடுத்த காரியங்களில் இருந்துவந்த இடர்பாடுகள் விலகும்.

விருச்சகம்:

புதுவிதமான எண்ணங்கள் மனதில் தோன்றும். உத்தியோகஸ்தர்களுக்கு பணிகளில் முன்னேற்றமான சூழல் உண்டாகும். போட்டி தேர்வுகளில் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். உடைமைகளில் கவனம் வேண்டும். மக்கள் தொடர்பு பணிகளில் இருப்பவர்களுக்கு புதிய அனுபவம் உண்டாகும்.

தனுசு:

வெளியூர் தொடர்பான பயணங்கள் சாதகமாக அமையும். குழந்தைகளின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பூர்வீக சொத்துக்களை மாற்றி அமைப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். மாணவர்கள் பாடங்களில் முழுகவனத்துடன் படிக்கவும். மனதில் பழைய நினைவுகளின் மூலம் சோர்வு உண்டாகும்.

மகரம்:

மனை தொடர்பான செயல்பாடுகளில் இலாபம் மேம்படும். விவசாயம் தொடர்பான பணிகளில் இருந்துவந்த இழுபறிகள் அகலும். மனதில் புதிய புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். சுபகாரியங்கள் தொடர்பான செயல்பாடுகளில் எண்ணங்கள் ஈடேறும். தனவரவுகளின் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும்.

கும்பம்:

வியாபாரத்தில் புதிய திட்டங்களால் இலாபம் அதிகரிக்கும். இளைய சகோதரர்களால் எதிர்பார்த்த அனுகூலம் உண்டாகும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். தகவல் தொடர்புத்துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் ஏற்படும். பணியில் திறமைக்கேற்ற பாராட்டுகள் கிடைக்கும்.

மீனம்:

கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த மனக்கசப்புகளை மனம்விட்டு பேசுவதன் மூலம் தெளிவு பிறக்கும். அனுபவ அறிவு மேம்படும். வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். முன்கோபம் இன்றி செயல்படுவது உங்களின் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும்