சுரேஷ் சக்ரவர்த்தியின் மனைவி.. இவ்வளவு அழகா.!? திருமண நாளில் வெளியான புகைப்படம்.!

சுரேஷ் தாத்தா

 

நடிகர் மம்முட்டி தமிழில் நடித்து வெளியான அழகன் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் சுரேஷ் சக்ரவர்த்தி. இவர் நடன கலைஞர், நடிகர், சமையல் கலைஞர் என்று பன்முக திறமை கொண்டவர். திரைப்படத்தில் சொக்கு என்ற கதாபாத்திரத்தில் படத்தின் பல்வேறு திருப்புமுனைகளுக்கு காரணமாக வீல் சேரில் அமர்ந்தபடி நடித்திருப்பார்.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு திரைப்படங்களிலும் சுரேஷ் நடித்திருக்கிறார். பாட்டிகள் ஜாக்கிரதை என்ற குறும்தொடரில் அவர் பாட்டியாக நடித்து பட்டையைக் கிளப்பி இருப்பார். அவரது அந்த நடிப்பு தான் அவ்வை சண்முகி கதாபாத்திரத்திற்கு இன்ஸ்பிரேஷன் என்று இன்றளவும் கூறப்படுகிறது.

சன் டிவியில் ஒளிபரப்பான பெப்ஸி உங்கள் சாய்ஸ் நிகழ்ச்சியையும் சிறிதுகாலம் சுரேஷ் சக்கரவர்த்தி தொகுத்து வழங்கினார். ஆஸ்திரேலியாவில் உணவகம் ஒன்றை நடத்தி வருகின்ற சுரேஷ் சக்கரவர்த்தி யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். சமீபத்தில் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார்.

அப்பொழுது தன்னுடைய குடும்பம் குறித்து பல உருக்கமான தகவல்களை அவர் பகிர்ந்து கொண்டார். இத்தகைய சூழலில், இன்று சுரேஷ் சக்ரவர்த்தி தனது 30ஆவது திருமண நாளை கொண்டாடி வருகிறார்.

30 வருடங்களுக்கு முன்பு தனது மனைவியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இணைய பக்கத்தில் ஷேர் செய்து 30 ஆண்டுகளாக என்னுடன் இருப்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை., நன்றி..! உன்னை காதலிக்கிறேன் என்று பதிவிட்டு இருக்கின்றார்.