தங்கத்தின் விலையில் ஏற்பட்ட மாற்றம்
தொழில்துறை தேக்கத்தை தொடர்ந்து உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடு பக்கம் திரும்பினர். பங்கு சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என பலவற்றில் இருந்த முதலீடுகளையும் மாற்றி தங்கத்தின் முதலீடு செய்து வருகின்றனர் .
பாதுகாப்பு கருதி தங்கத்தில் முதலீடு செய்வதால், தங்கத்தின் தேவை அதிகரித்து, அதன் விலை உயரத் தொடங்கியுள்ளது. கொரோனா அச்சுறுத்தலால் தொழில்துறை தேக்கம் குறித்த பீதி நிலவி வந்த நிலையில், தங்கத்தின் விலை தற்போது ஏற்றம் இறக்கமாக இருந்து வருகிறது.
கடந்த மாதத்தில் ஒரு பவுன் ஆபரணத் தங்கம் 40 ஆயிரத்தைத் தாண்டியது. அதன் பிறகு தங்கத்தின் விலை ஏற்றம், இறக்கம் என இருந்து வருகிறது.
இந்நிலையில், சென்னையில் இன்று, 22 கார்ட் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 320 உயர்ந்து, ஒரு கிராம் ரூ. 4,691 ஆகவும், 8 கிராம் ஆபரண தங்கம் ரூ. 37,528 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
24 காரட் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 320 உயர்ந்து, ஒரு கிராம் ரூ. 5,075 ஆகவும், 8 கிராம் தங்கம் ரூ. 40,600 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.