அப்பா, அம்மா பாட்டியை து.ரத்திட்டாங்க.. வீட்டில் யாரும் கண்டுகொள்ளாத சோகம்!

தமிழகம்

வேலூர் மாவட்டத்தில் உள்ள சி.எம்.சி மருத்துவமனை காந்தி ரோடு பகுதியில், கடந்த ஒரு வாரமாக மூதாட்டி ஒருவருடன் இளம்பெண் சுற்றி வந்துள்ளார். மேலும், இரவு வேளைகளில் அங்குள்ள கடைகளுக்கு முன்புறம் படுத்து உறங்கியுள்ளனர். வெளிமாநில நபர்கள் அதிகஅளவு சுற்றித்திரியும் பகுதியில் மூதாட்டி திரிந்தால், அவரை யாரும் கண்டுகொள்ளவில்லை.

நேற்று, அப்பகுதியை சார்ந்த கடைக்காரர்கள் இளம்பெண்ணிடம் விசாரிக்கவே, அவர் ஆங்கிலத்தில் சரளமாக பேசியுள்ளார். மேலும், தங்களுக்கென யாரும் இல்லை என்றும், சிகிச்சைக்காக வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரத்திற்கு இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், மூதாட்டி மற்றும் இளம்பெண்ணை மீ.ட்டுள்ளனர். விசாரணையில், சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூரை சார்ந்த லக்னா பாய் (வயது 65) மற்றும் அவரது பேத்தி தேஜா ஸ்ரீ (வயது 19) என்பது தெரியவந்துள்ளது.

வேலூரில் உள்ள கல்லூரியில் பி.எஸ்.சி முதல் வருடம் பயின்று வரும் தேஜா ஸ்ரீ, ஆங்கிலத்தில் ” தனது பாட்டிக்கு உ.டல்நிலை சரியில்லை. சொ.த்.து த.க.ரா.று காரணமாக எனது அப்பா, அம்மா மற்றும் உறவினர்கள் வீட்டினை விட்டு பாட்டியை வெளியே அனுப்பிவிட்டனர். பாட்டியுடன் நானும் வந்துவிட்டேன். வேலூரில் உள்ள உறவினரின் வீட்டிற்கு வந்தபோது, அவர்களும் எங்களை ஆதரிக்கவில்லை. இதனால் தெருவில் சுற்றி வருகிறோம் ” என்று தெரிவித்தார்.

இதனையடுத்து இருவரையும் வாலாஜா அரசு காப்பகத்தில் சேர்த்த நிலையில், இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்களின் தகவல் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது.