கேப்ரில்லா அம்மாவுக்கு அப்புறம் அதிகமா நேசிக்கிறது இவர் தானா.?!

கேப்ரில்லா

தனுஷ் மற்றும் ஸ்ருதிஹாசன் நடிப்பில் வெளியான 3 படத்தில் ஸ்ருதிஹாசனின் தங்கையாக நடித்திருந்தார். அதன்பின் சென்னையில் ஒரு நாள், அப்பா போன்ற படங்களில் நடித்தார்.

சினிமாவுக்கு முன், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி என்ற நடன நிகழ்ச்சியின் மூலம் பலரும் பிரபலமடைந்துள்ளனர்.பின்பு, அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஏழாம் வகுப்பு ‘c’ பிரிவு அதாவது ‘7 சி’ என்ற சீரியலில் கேபி என்னும் கதாபாத்திரத்தில் நடித்தார்.

பிக்பாஸ் சீசன் 4 -ல் கலந்து கொண்டு ரசிகர்களின் மனதில் இடம்பெற்றார். யாருக்கும் அவர் மீது எந்தவிதமான வெறுப்பு ஏற்படாத அளவிற்கு தனது விளையாட்டை சிறப்பாக ஆடினார். ஆனால் 100 நாட்கள் முடிந்த பின்னர், எதிர்பாராத நேரத்தில் ரூ.5 லட்சம் பெட்டியை எடுத்துக்கொண்டு நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார்.

இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், பல நாட்களுக்கு பின் அவரை பார்த்த சந்தோஷத்தில் அவரின் தோழி ஓடி வந்து இவரை கட்டி அணைத்துக்கொள்ளும் காட்சி பதிவாகியுள்ளது.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Gabriella Charlton (@gabriella.charlton._)