பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்தவுடன் கமல்ஹாசன் குறித்து ஆரி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவு.!

கமலஹாசன்

தனியார் தொலைக்காட்சியில் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி நான்காவது சீசன் அக்டோபர் 4ஆம் தேதி துவங்கியது. இதில் 16 போட்டியாளர்கள் பங்கேற்ற நிலையில் ஆரி, பாலா, சோம், ரியோ, ரம்யா போன்ற ஐந்து போட்டியாளர்கள் இறுதியாக தேர்வு செய்யப்பட்டனர்.

இவர்களில் ஆரி அர்ஜுனன் அதிக வாக்குகளை பெற்றுவெற்றி பெற்றார். வெற்றி பெற்ற ஆரிக்கு அவருடைய ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் என்று பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இரண்டாவது இடத்தை பெற்ற பாலாஜி முருகதாஸுக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இத்தகைய சூழலில் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்தவுடன் நடிகர் கமலஹாசனுக்கு காலில் அறுவை சிகிச்சை செய்யப் போவதாக தகவல்கள் வெளியாகி வந்தது. தற்போது அவர் சிகிச்சை முடிந்து நலமாக இருப்பதாக அவருடைய மகள் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். இதுகுறித்து நடிகர் கமல் கூட தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று வெற்றி பெற்ற ஆரி அர்ஜுனன் கமலஹாசனுக்கு ஒரு ட்வீட் செய்துள்ளார். அதில்,”அன்பார்ந்த கமல் Sirக்கு உங்கள் உடல்நலம் சீக்கிரமாக குணமடைந்து நீங்கள் மேலும் பல உயரங்களும் சாதனைகளையும் செய்ய என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.” என்று தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே, கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் ஆரி அர்ஜுனன் இணையப்போவதாக வதந்திகள் கிளம்பிய நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்தும் அவர்களது உறவு நீடிப்பது வலுவான சந்தேகத்தை கிளம்புவதாக கிசுகிசுக்கப்படுகிறது.