இலங்கையில் நோய் அறிகுறிகள் இல்லாத கொரோனா நோயாளிகளால் ஆபத்து

கொரோனா

கொரோனா தொற்றாளர் ஒருவரினால் முதல் 10 நாட்களுக்குள் வைரஸ் பரவும் அபாயம் அதிகம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனை கட்டுப்படுத்துவதற்காக புதிய முறை ஒன்றை தயாரிப்பது அவசியம் என கொரோனா தொற்றினை தடுக்கும் இராஜாஙக அமைச்சர் விசேட வைத்தியர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

கொரோனா ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நோய் அறிகுறிகள் அற்ற கொரோனா தொற்றாளர்கள் தொடர்பில் செயற்படும் போது முதல் 10 நாட்கள் சிகிச்சை நிலையத்திலும் ஏனைய 4 நாட்கள் வைத்திய கண்கானிப்பின் கீழ் வீட்டிலும் வைப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.