நெய்
நெய்யை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வது உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை பராமரிக்க உதவி செய்கிறது. நெய்யிலிருக்கும் ஆரோக்கியமான அமிலம், வைட்டமின் பி2, வைட்டமின் பி12, வைட்டமின் பி6, வைட்டமின் சி, வைட்டமின் ஈ போன்ற பிற ஊட்டச்சத்துக்களும், நமது உடலுக்கு பல நன்மைகளை செய்கிறது.
இதுமட்டுமல்லாது ஒமேகா 3 மற்றும் ஒமேகா 6 கொழுப்பு அமிலங்களும் இருக்கிறது. இதனால் உடலின் மூளை, இதயம், நரம்பு மண்டலம் ஆரோக்கியமாக பராமரிக்கப்படுகிறது.
நெய்யில் கொழுப்புகள் இருந்தாலும், சமையலுக்கு பயன்படுத்தும் பிற எண்ணெய்களை விட மிகச்குறைந்த அளவிலான கொழுப்பே இருக்கிறது.
நெய்யை வயதுக்கு ஏற்ப உணவில் சேர்த்துக் கொள்வது உடலுக்கு உகந்தது. பருவ வயதை எட்டிய ஆண்களும், பெண்களும் தினமும் இரண்டு கரண்டி நெய்யை சாப்பிடலாம். கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் பெண்கள் தினமும் 3 கரண்டி நெய்யை சாப்பிடலாம்.
2 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இரண்டு முதல் மூன்று தேக்கரண்டி வரையிலான நெய் சேர்த்துக்கொள்ளலாம். 3 வயது முதல் 9 வயது வரை உள்ள குழந்தைகளுக்கும் 3 தேக்கரண்டி அளவுள்ள நெய்யே கொடுக்க வேண்டும். 10 வயது முதல் 17 வயது வரை உள்ள இளம் பருவத்தினருக்கு, நான்கு தேக்கரண்டி வரை கொடுக்கலாம்.
நெய்யில் பசு நெய் மற்றும் எருமை நெய் என இரண்டுமே உடலுக்கு நன்மை சேர்க்கும். எருமை நெய்யில் உள்ள வைட்டமின் கே, இரத்த அணுக்களில் கால்சியம் படிவதை தடுக்கிறது. கண்களை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது. வளர்சிதை மாற்றத்தை ஒழுங்குபடுத்த உதவி செய்கிறது.