பாடகி சுசித்ரா கூறிய ஒற்றை வார்த்தை.! படுத்தி எடுக்கும் ஆரி ரசிகர்கள்.!

பாடகி சுசித்ரா
விஜய் டிவியில் உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கி வருகின்ற நிகழ்வுதான் பிக் பாஸ் சீசன் 4. கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த சீசன் முடிவுக்கு வந்தது. இந்த நிகழ்ச்சி, ஆரம்பித்த பொழுது வைல்ட் கார்டு என்ட்ரி ஆக உள்ளே நுழைந்தவர் தான் பாடகி சுசித்ரா.

பிக்பாஸ் வீட்டில் நுழைந்த ஆரம்ப கட்டத்தில் சுசித்ரா மிகவும் பரபரப்பான போட்டியாளராக கருதப்பட்டார். ஆனால், நாட்கள் செல்ல செல்ல அவர் பாலாஜிக்கு சப்போர்ட் செய்து தன்னுடைய கேமை ஆடுவதை விட்டுவிட்டார். இதன் காரணமாக, உள்ளே சென்ற வேகத்திலேயே சுசித்ரா வெளியே தூக்கி எறியப்பட்டார்.

வெளியான பின்பும் பாலாஜிக்கு ஆதரவாக பல்வேறு பதிவுகளை ட்விட்டர் தளத்தில் பதிவிட்டு வந்தார். திடீரென்று ஒரு நாள் ஆரிக்கு ஓட்டு போடுங்கள். அவர்தான், ரியல் ஹீரோ என்று கூறி தான் ஓட்டு போட்ட ஸ்க்ரீன் ஷாட் ஒன்றை ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் ரசிகர் ஒருவர் உங்களுக்கு ஆரியை தானே பிடிக்கும் என்று கேட்டதற்கு எனக்கு அவரை சுத்தமாக பிடிக்காது. அவருடைய சில்லியான திமிர் இந்த நிகழ்ச்சியில் அவர் வெற்றி பெற்றால் மட்டும் தான் அடங்கும். இந்த காரணத்திற்காக தான் ஆரிக்கு ஓட்டு போட செய்தேன். அவர் சாத்தானின் வக்கீல் என்று தெரிவித்துள்ளார்.

சுசித்ராவின் இந்த பதிவு ஆரி ரசிகர்களுக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது. எனவே, ஆரி ரசிகர்கள் அவரை மோசமாக விமர்சித்து வருகின்றனர்.