விஜய் டிவி பாக்யலட்சுமி சீரியலில் நடித்து வரும் சுசித்ராவா இது? வேற லெவல் போட்டோக்கள்.!

பாக்கியலட்சுமி

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் அதிகம் விரும்பி பார்க்கப்படும் சீரியல் என்றால் அது பாக்கியலட்சுமி சீரியல்தான்.

ஒரு குடும்ப தலைவியின் கஷ்டம் மற்றும் அனுபவங்கள் குறித்த கதையை மையமாக வைத்து நகரும் கதை தான் பாக்கியலட்சுமி.

இந்த சீரியலில் பாக்கியலட்சுமி மகனான செழியன் காதல் விவகாரம் சில மாதங்களுக்கு முன்பு மிகவும் விறுவிறுப்பாக சென்றது. இளவயதினர் கூட சீரியல் பார்க்கும் அளவிற்கு அந்த காதல் பிரச்சினைகள் அமைந்தது.

தனது மகனின் காதல் திருமணத்தை நடத்தி முடிக்க பாக்கியலட்சுமி படாத பாடு பட்டது அனைவரும் அறிந்ததே. இதில் கதாநாயகியாக பாக்கியலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் நடிப்பவர் பெயர் சுசித்ரா.

சீரியலில் அவரை புடவையில் மட்டும் மிக லட்சணமாக கண்ட அவருடைய ரசிகர்கள் தற்போது வைரலாகி வரும் அவருடைய மாடர்ன் உடை புகைப்படத்தைக் கண்டு வியந்துள்ளனர். அந்த புகைப்படம் தற்போது வைரல் ஆகி வருகின்றது.