இன்றைய ராசிபலன்: 25.01.2021: தை மாதம் 12ம் தேதி: இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன்!

ஜனவரி 25,2021


இன்று!
சார்வரி வருடம், தை 12, 25.1.2021, திங்கட்கிழமை,
வளர்பிறை, துவாதசி திதி நள்ளிரவு 12:19 வரை,
அதன்பின் திரயோதசி திதி, மிருகசீரிடம் நட்சத்திரம் நள்ளிரவு 2:04 வரை,
அதன்பின் திருவாதிரை நட்சத்திரம், அமிர்த – சித்தயோகம்.

நல்ல நேரம் : காலை 6.00 மணி முதல் காலை 7.30 மணி வரை.
ராகு காலம் : காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை.
எமகண்டம் : காலை 10.30 மணி முதல் பிற்பகல் 12.00 மணி வரை.
குளிகை : பிற்பகல் 1.30 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை.
சூலம் : கிழக்கு

பரிகாரம் : தயிர்
சந்திராஷ்டமம் : விசாகம், அனுஷம்
பொது : முகூர்த்த நாள், வாஸ்து நாள் காலை 10:41- 11:17 மணி

மேஷம் மேன்மை

மேஷம்:

நீண்ட நாட்களாக நினைத்த காரியங்கள் ஈடேறும். புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். மனதில் புதுவிதமான தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். பதவி உயர்விற்கான வாய்ப்புகள் உண்டாகும். பணியாளர்களிடம் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது.

ரிஷபம் உயர்வு

ரிஷபம்:

குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவதில் ஆர்வம் உண்டாகும். நீண்ட நாள் நண்பர்களை கண்டு மனம் மகிழ்வீர்கள். பொதுநலத்தொண்டில் ஈடுபடுபவர்களுக்கு கீர்த்தி உண்டாகும். அந்நியர்களின் மூலம் இலாபம் ஏற்படும். நிலுவையில் இருந்துவந்த தனவரவுகள் கிடைக்கும்.

மிதுனம் அன்பு

மிதுனம்:

மனதில் புதிய ஆசைகள் தோன்றும். போட்டிகளில் ஈடுபட்டு வெற்றி அடைவீர்கள். சக பணியாளர்களை அனுசரித்து செல்லவும். ஆன்மிக வழிபாட்டில் மனம் ஈடுபடும். எடுத்த வேலையை சிறப்பாக செய்து முடித்து நற்பெயர் பெறுவீர்கள்.

கடகம் ஆதரவு

கடகம்:

வாக்குவன்மையினால் காரியசித்தி உண்டாகும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள். நினைவுத்திறனில் மந்தத்தன்மையால் காலதாமதம் உண்டாகும். மற்றவர்களுக்கு உதவும்போது சிந்தித்து செயல்படவும். பிள்ளைகளிடம் பேசும்போது கவனம் வேண்டும்.

சிம்மம் நன்மை

சிம்மம்:

உறவினர்களால் எதிர்பார்த்த அனுகூலமான பலன்கள் உண்டாகும். உத்தியோகத்தில் கௌரவ பொறுப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உண்டாகும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். உடல் நலம் சீராகும். சகோதரர்கள் வகையில் நன்மை ஏற்படும். பயணங்களால் மனதில் மாற்றங்கள் உண்டாகும்.

கன்னி பொறுமை

கன்னி:

எதிர்பாராத தனவரவுகள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். பாதியில் நின்ற வேலைகளை செய்து முடிப்பீர்கள். உத்தியோகம் தொடர்பான செயல்பாடுகளில் திருப்தியான சூழல் உண்டாகும். விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை செய்து முடிப்பீர்கள். எதிர்காலம் சார்ந்த எண்ணங்கள் மேம்படும்.

துலாம் பொறாமை

துலாம்:

வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்களின் வருகை உண்டாகும். வெளிவட்டார தொடர்புகள் அதிகரிக்கும். அதிகார பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். குடும்பத்தில் உங்களின் கருத்துக்களுக்கு மதிப்புகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனைகள் தீரும்.

விருச்சிகம் விவேகம்

விருச்சகம்:

தேவையற்ற சஞ்சலமான எண்ணங்களால் நெருங்கிய நபர்களை இழக்க நேரிடும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளிடம் கருத்து வேறுபாடுகள் தோன்றும். தனம் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும். சிந்தனையின் போக்கில் மாற்றங்கள் உண்டாகும்.

தனுசு பணிவு

தனுசு:

கணவன், மனைவிக்கிடையே சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். பூர்வீக சொத்துக்களால் தொழிலில் ஆதாயம் உண்டாகும். வர்த்தக மேம்பாட்டிற்கான செயல்களில் நண்பர்களின் உதவிகள் கிடைக்கும். கூட்டாளிகளிடம் ஏற்பட்ட விவாதங்களினால் சாதகமான பலன்கள் உண்டாகும்.

மகரம் நலம்

மகரம்:

வெளிநாட்டு பயணங்களால் கீர்த்தி உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். சபைகளில் தனக்கு ஆதரவாக இருப்பவர்களின் உதவிகள் கிடைக்கும். பணி செய்யும் இடங்களில் மேன்மையான சூழல் உண்டாகும். மூத்த சகோதரர்களிடம் வாக்குவாதங்களை தவிர்க்கவும்.

கும்பம் உற்சாகம்

கும்பம்:

எண்ணிய முயற்சிகள் ஈடேறும். புத்திக்கூர்மை வெளிப்படும்.
பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். சுயதொழில் புரிபவர்களின் எண்ணங்கள் மேம்படும். பிள்ளைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள்.

மீனம் ஓய்வு

மீனம்:

சொத்துக்களில் இருந்துவந்த பிரச்சனைகள் குறையும். காரியத்தடைகள் நீங்கி எண்ணிய வெற்றி உண்டாகும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு உயரும். பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். தாயின் ஆதரவினால் மனமகிழ்ச்சி அடைவீர்கள். வாழ்க்கையில் வசதி வாய்ப்புகள் மேம்படும்.