முள்ளியவளை வித்தியானந்தாக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் எறிகணைகள் மீட்பு!

முல்லைத்தீவு

முள்ளியவளை வித்தியானந்தக் கல்லூரியின் விளையாட்டு மைதான புனரமைப்பு பணிகள் இன்று (25-1-2020) காலை மேற்கொள்ளப்பட்டது.

இதன் போது போர் காலத்தில் புதைக்கப்பட்ட எறிகணைகளை இனம் கண்ட வேலையாட்கள் உடனடியாக புனரமைப்பு பணியை நிறுத்திவிட்டு முள்ளியவளை பொலீஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கியுள்ளனர்.

குறித்த இடத்தில் மேலும் பல வெடிபொருட்கள் இருக்கலாம் என அப்பகுதிக்கு விரைந்த இராணுவத்தினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

நீதிமன்ற உத்தரவிற்கு அமைய சட்ட நவடிக்கை எடுக்கப்பட்டு குறித்த வெடிபொருட்கள் அகற்ற நடவடிக்கை எடுக்கவுள்ளதாக முள்ளியவளை பொலீசார் தெரிவித்துள்ளார்கள்.

படங்கள் –Sivarajah Vinojh