இன்றைய ராசிபலன்: 26.01.2021: தை மாதம் 13ம் தேதி: இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன்!

ஜனவரி 26,2021


இன்று!
சார்வரி வருடம், தை 13, 26.1.2021,
செவ்வாய்க்கிழமை, வளர்பிறை, திரயோதசி திதி நள்ளிரவு 1:15 வரை,
அதன்பின் சதுர்த்தசி திதி, திருவாதிரை நட்சத்திரம் நள்ளிரவு 3:29 வரை,
அதன்பின் புனர்பூசம் நட்சத்திரம், மரண – சித்தயோகம்.

நல்ல நேரம் : காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை.
ராகு காலம் : பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை.
எமகண்டம் : காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை.
குளிகை : பிற்பகல் 12.00 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை.
சூலம் : வடக்கு

பரிகாரம் : பால்
சந்திராஷ்டமம் : கேட்டை
பொது : பிரதோஷம், குடியரசு தினம்.

மேஷம் சாந்தம்

மேஷம்:

எதையும் சமாளிக்கும் திறமைகள் வெளிப்படும். குடும்பத்தாருடன் விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள். எதிர்பார்த்த பணத்தேவைகள் பூர்த்தியாகும். எதிலும் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். திட்டமிட்டபடி காரியங்களை செய்து முடித்து மனநிம்மதி அடைவீர்கள்.

ரிஷபம் அமைதி

ரிஷபம்:

குடும்பத்தில் மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும். வாக்குவன்மையால் பொருள் ஆதாயம் உண்டாகும். விலகி நின்றவர்களின் மூலம் எதிர்பாராத ஆதரவு கிடைக்கும். பிள்ளைகளின் கல்வி தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும். மனதில் ஏதாவது கவலை இருந்து கொண்டே இருக்கும்.

மிதுனம் நட்பு

மிதுனம்:

நீண்ட நாட்களாக இருந்துவந்த பிரச்சனைகள் தீரும். அரசாங்கம் தொடர்பான காரியங்களில் சாதகமான பலன்கள் உண்டாகும். பயணங்கள் தொடர்பான செயல்பாடுகளின் மூலம் நன்மை ஏற்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். பழக்கவழக்கங்கள் தொடர்பான செயல்பாடுகளில் மாற்றங்கள் ஏற்படும்.

கடகம் ஆதரவு

கடகம்:

கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். செலவுகளை திட்டமிட்டு செய்வது நல்லது. மற்றவர்களின் மீது அன்பும், புரிதலும் உண்டாகும். செயல்பாடுகளில் இருந்துவந்த தடைகள் நீங்கும். மனதில் ஒருவிதமான சோர்வு ஏற்பட்டு மறையும்.

சிம்மம் ஆக்கம்

சிம்மம்:

மற்றவர்களிடம் இருந்து பாராட்டுகள் கிடைக்கும். செயல்திறன் அதிகரிக்கும். பயணங்களின் மூலம் சாதகமான பலன்கள் உண்டாகும். வியாபார அபிவிருத்தி தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

கன்னி பிரமை

கன்னி:

புதிய வேலை தொடர்பான முயற்சிகள் ஈடேறும். எதிர்பாராத சில மாற்றங்களின் மூலம் புதுவிதமான அனுபவம் ஏற்படும். வாழ்க்கைத்துணைவரின் ஒத்துழைப்பின் மூலம் தொழில் சார்ந்த முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். திறமைக்கான பாராட்டுகளும், அங்கீகாரமும் கிடைக்கும்.

துலாம் சுகம்

துலாம்:

செய்யும் முயற்சிகளில் பெரியோர்களின் ஆதரவு கிடைக்கும். மனதில் எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். நிர்வாகம் தொடர்பான முடிவுகளில் சிந்தித்து செயல்பட வேண்டும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான செலவுகள் அதிகரிக்கும். நிலுவையில் இருந்துவந்த நீண்ட நாள் சேமிப்புகள் எதிர்பாராத வகையில் கிடைக்கும்.

விருச்சிகம் பெறுமை

விருச்சகம்:

புதிய செயல்களை செய்யும்போது சிந்தித்து செயல்படவும். மற்றவர்களை நம்பி காரியங்களில் இறங்கும்போது கவனம் வேண்டும். நண்பர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். சுரங்கம் தொடர்பான பணிகளில் கவனம் வேண்டும். மக்கள் தொடர்பு பணியில் இருப்பவர்களுக்கு அலைச்சல்கள் மேம்படும்.

தனுசு நற்செயல்

தனுசு:

வழக்கு விவகாரங்களில் சாதகமான பலன்கள் உண்டாகும். தொழிலில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்விற்கான வாய்ப்புகள் ஏற்படும். மற்றவர்கள் கூறும் ஆசை வார்த்தைகளுக்கு மயங்காமல் இருப்பது அவசியமாகும். பதற்றத்தை தவிர்த்து நிதானத்துடன் செயல்படவும்.

மகரம் போட்டி

 

மகரம்:

பணிகளில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வியாபாரத்தில் இருந்துவந்த கடன் பிரச்சனைகள் குறையும். மற்றவர்களிடம் கருத்துக்களை கூறும்போது சிந்தித்து செயல்பட வேண்டும்.

கும்பம் ஜெயம்

கும்பம்:

கட்டிடக்கலை சார்ந்த தொழில் செய்பவர்களுக்கு நன்மை உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் பொருளாதார பிரச்சனைகள் குறையும். கல்வி தொடர்பான செயல்பாடுகளில் மேன்மையான பலன்கள் உண்டாகும். பூர்வீக சொத்துக்களின் மூலம் அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.

மீனம் சாதனை

மீனம்:

எந்த சூழ்நிலைகளையும் சமாளித்து முன்னேற்றம் அடைவீர்கள். வியாபாரம் தொடர்பான முயற்சிகள் சாதகமான பலன்களை தரும். அண்டை, அயலாரின் ஆதரவு கிடைக்கும். குறுகிய தூர பயணங்களை மேற்கொள்வீர்கள். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.