கையில் 3 மோதிரம் இருந்தும், பரிசு மோதிரத்திற்கு ஆசைப்பட்டு மொத்தத்தையும் இ.ழந்த மூதாட்டி.!

தமிழகம்
சென்னையில் உள்ள லாயிட்ஸ் சாலை துவாரகா நகர் பகுதியைச் சார்ந்தவர் ராவணம்மா (வயது 65). இவர் நேற்று மயிலாப்பூர் திருவள்ளுவர் சிலை அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில் நடந்து சென்று கொண்டிருந்த நிலையில், அப்போது வந்த ஒருவர் மூதாட்டியை வ.ழிமறித்து, அருகில் இருந்த வீட்டை காட்டி அங்கு குழந்தைகளுக்கான நிகழ்ச்சி நடைபெறுகிறது என்று கூறியுள்ளான்.

மேலும், அந்த குழந்தையை ஆசிர்வதிக்க பெரியவர்களை குடும்பத்தினர் எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் கூறியுள்ளார். குழந்தைக்கு ஆசீர்வாதம் செய்தால் தங்க மோதிரம் பரிசாக கொடுப்பார்கள் என்றும் ஆ.சை வா.ர்த்தை கூறி நிலையில், தங்க மோதிரத்திற்கு ஆசைப்பட்ட மூதாட்டியும் ஆசிர்வாதம் வழங்க சம்மதம் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, மூதாட்டியை அழைத்து சென்ற வீட்டிற்கு கீழ்ப்படியில் அமர வைத்துள்ளான். பின்னர், யாரிடமோ போனில் பேசுவது போல பாவனை காட்டி, குழந்தைகளின் பெற்றோர் பெரும் செல்வந்தர்கள் என்றும், குழந்தையை ஆசீர்வாதம் செய்ய வழங்கப்படும் தங்க மோதிரத்திற்கு மாடல் காண்பிக்க வேண்டும் என்றும், மூதாட்டி கைகளில் போட்டிருந்த கையிலிருந்த 3 மாத்திரைகளை வாங்கிச் சென்றுள்ளான்.

அந்த நபருக்காக நீண்ட நேரம் காத்திருந்த மூதாட்டிக்கு ஏ.மாற்றமே மிஞ்சியிருந்த நிலையில், அந்த வீட்டில் இருந்த கா.வலாளி தனியாக மூதாட்டி அமர்ந்திருப்பதை பார்த்து வி.சாரித்துள்ளார். இதன் பின்னர் மூதாட்டி ஏ.மாற்றப்பட்டது உறுதியானது. இந்த விஷயம் தொடர்பாக மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ராவணம்மா புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வ.ழக்குப்பதிவு செய்து வி.சாரணை மேற்கொண்டு வரும் நிலையில், வயதானவர்களை குறிவைத்து இதுபோன்ற மோ.ச.டி.யில் ஈடுபட்டு வருவது வி.சாரணையில் உறுதியாகியுள்ளது. இது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.