பிக்பாஸில் ஆரி கலந்துகொள்ள காரணம் யார் தெரியுமா.!? ஆரி வெளியிட்ட சுவாரஸ்ய தகவல்கள்.!

பிக்பாஸ் ஆரி

பிக்பாஸ் நிகழ்ச்சி 4 சீசன்களை கடந்த நிலையில், மிகப்பெரிய ரசிகர் கூட்டத்தை பெற்றுள்ளது. சில நாட்களுக்கு முன்புதான் நான்காவது சீசன் முடிவுக்கு வந்தது. மக்களின் பெருவாரியான வாக்குகளைப்பெற்று ஆரி அர்ஜுனன் பிக்பாஸ் வின்னராக முடிசூடினார்.

பல்வேறு தரப்பில் இருந்தும் அவர் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. ஆனால், தற்போது ஆரி நிகழ்ச்சியில் கலந்து கொண்டது குறித்து ஒரு தகவல் வெளியாகி வருகின்றது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் சீசனில் இருந்து அவரை பங்குகொள்ள கோரிக்கை வைத்து வந்தனர்.


ஆனால், ஆரிஇதில் கலந்துகொள்ள மறுப்பு தெரிவித்த நிலையில், நான்காவது சீசனில் தான் ஓகே தெரிவித்திருக்கின்றார். இதற்கு முக்கிய காரணமாக ஆரியின் முதல் படமான ரெட்டைச்சுழி படத்தின் இயக்குனர் தாமிரா தான் இருந்துள்ளார்.

இது குறித்து அவர் தெரிவித்துள்ள பேட்டியில், “மூன்று சீசனிலும் எனக்கு அழைப்பு வந்தது. ஆனால், இந்த நிகழ்ச்சி குறித்து எந்த ஒரு ஐடியாவும் இல்லாததால் நான் முதல் சீசனுக்கு நோ சொல்லிவிட்டேன். தொடர்ந்து மற்ற சீசன்களில் குழந்தை, திருமணம் என்று பல்வேறு காரணங்களால் தள்ளிப் போனது.


இந்த சீசன் பற்றி நான் யோசித்துக் கொண்டிருந்த பொழுது இயக்குநர் தாமிரா தான் நீங்கள் சரியாக இருக்கும் பட்சத்தில் யாரும் உங்களை எதுவும் செய்ய முடியாது என்று நம்பிக்கையை கூறினார். அந்த தைரியத்தில்தான் நான் பிக்பாஸ் நிகழ்ச்சி நான்காவது சீசனில் கலந்து கொண்டேன்.” என்று ஆரி தெரிவித்துள்ளார்.