அடுத்தடுத்து மூன்று மாணவிகள் நீரில் மூழ்கி ப.லி! ஊரே சோகத்தில்!

தமிழகம்

கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ரூட்டி ஏ.புதூர் வடக்குத்தெரு பகுதியை சார்ந்தவர் இலட்சபூபதி. இவர் காய்கறி வியாபாரியாக பணியாற்றி வருகிறார். இவரது மகள் நந்தினி (வயது 18), வினோதினி (வயது 17). இப்பகுதியை சார்ந்த பாலமுருகன் என்பவரின் மகள் புவனேஸ்வரி (வயது 20).

வடலூரில் உள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வினோதினி பன்னிரண்டாம் வகுப்பும், நந்தினி தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி முதல் வருடமும், புவனேஸ்வரி குறிஞ்சிப்பாடியில் இருக்கும் கல்லூரியில் பி.எஸ்.சி இறுதி வருடமும் பயின்று வந்துள்ளார்.

இந்நிலையில், இக்கிராமத்தில் இருக்கும் கன்னியம்மன் கோவிலில் கன்னிவிடு திருவிழாவை முன்னிட்டு, சாமிக்கு அக்குளத்தில் இருந்து தீர்த்தவாரி எடுத்து வரும் நிகழ்வு நடைபெறாது. இந்த நிகழ்வில் திருவிழாவில் கலந்துகொண்ட பலரும் குளத்தில் நீராடியுள்ளனர்.

இதன்போது மாணவிகள் நந்தினி, வினோதினி மற்றும் புவனேஸ்வரி ஆகியோரும் சேர்ந்து நீராடினர்.

இதில், எதிர்பாராத விதமாக மாணவிகள் மூவரும் அடுத்தடுத்து நீரில் மூழ்கி ப.லியாகியுள்ளனர். இதனால் அக்கிராமமே பெரும் சோகத்திற்கு உள்ளாகியுள்ளது.