வாளியில் உள்ள நீரில் விளையாட்டு.. நொடிப்பொழுதில் நடந்த விபரீதம்..!

பெற்றோர்களே கவனம்.!

சங்கரன்கோவிலில் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த 2 வயது ஆண் குழந்தை, நீர் நிரம்பிய பிளாஸ்டிக் வாளியில் தலைகுப்புற விழுந்து பலியான சம்பவம் அரங்கேறியுள்ளது.

தென்காசி மாவட்டத்திலுள்ள சங்கரன்கோவில் கக்கன் நகர் பகுதியைச் சார்ந்தவர் செபஸ்டியன். இவரது மனைவி எஸ்தர். இவர்கள் இருவருக்கும் ஆரோன் என்ற 2 வயது குழந்தை இருக்கிறது. இந்நிலையில், வீட்டில் அமர்ந்து சிறுவன் விளையாடிக் கொண்டிருந்துள்ளான்.

இதன்போது, தண்ணீர் சேமித்து வைத்திருந்த நீரில் குழந்தை தலைகுப்பற விழுந்து பலியானதாக கூறப்படுகிறது. வீட்டிற்குள் இருந்து வந்த பெற்றோர், மகன் பேச்சு மூச்சின்றி வாளியில் தவறி விழுந்துள்ளதை கண்டு அதிர்ச்சிக்குள்ளாகி மருத்துவமனைக்கு மகனை கொண்டு சென்றுள்ளனர்.

சிறுவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள், சிறுவன் ஆரோன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், குழந்தைகள் உள்ள வீட்டில் பெற்றோர்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என்றும் காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.