நெகிழ்ச்சியை ஏற்படுத்திய தாய்மை.. தாயை இழந்த நாய்குட்டிகளை அரவணைத்து பாதுகாக்கும் கோழி.!

இந்தியா

தாயை இழந்த குட்டி நாய்களை கோழி பாதுகாத்து வரும் நெகிழ்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம் செய்யூர் பகுதியைச் சார்ந்தவர் ஜெகன். இவரது வீட்டில் அழகிய நாய்க்குட்டி ஒன்றும், கோழிகளும் வளர்ந்து வந்துள்ளது. இந்நிலையில், அந்த நாய்க்குட்டி கர்ப்பிணியாக இருந்த நிலையில், தற்போது 5 குட்டிகளை ஈன்றது.

குட்டிகளை பிரசவித்த நாய் 10 நாட்களுக்குள் பரிதாபமாக உயிரிழந்தது. கண்களை கூட திறக்காத அந்த நாய் குட்டிகள், தற்போது வீட்டில் அங்கும் இங்குமாக சுற்றி வருகிறது. இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் ஜெகன் தவித்துள்ளார்.

வீட்டில் உள்ள அனைவருக்கும் இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தும் பொருட்டு, வீட்டில் வளர்ந்த கோழி, நாய் குட்டிகளை அரவணைத்து பாதுகாத்து வருகிறது. மேலும், மற்ற விலங்குகள் நாய்க்குட்டிகளை நெருங்க விடாமல் விரட்டி விடுகிறது. இதனை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் கண்டு செல்கின்றனர்.