லைவ் நிகழ்ச்சியில் நெகிழ்ச்சி.. அம்மாவை தேடி வந்த மகன்…

உலகம்

அமெரிக்க நாட்டில் பிரபல தொலைக்காட்சி ஏபிசி7 செய்தி நிறுவனம். இந்த செய்தி நிறுவனத்தின் வானிலை தொகுப்பாளராக பணியாற்றி வருபவர் லெஸ்லி லோபஸ். தற்போது கொரோனா சூழ்நிலை காரணமாக பெரும்பாலான பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணியாற்றி வருகின்றனர்.

அந்த வகையில், தொலைக்காட்சி தொகுப்பாளராக பணியாற்றி வரும் லெஸ்ஸி, வீட்டிலிருந்தே பணியாற்றி வருகிறார். தினசரி இரவு வேளையில் மாநில வானிலை அறிக்கையை தொகுப்பித்து வழங்குவது இவரது பணியாகும்.

நேற்று இரவு நேரடி ஒளிபரப்பின் போது, வானிலை முன்னறிவிப்பு நடைபெற்றது. இதன்போது, வானிலை அறிக்கை செய்தியை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த போது, அவரது பத்து மாத குழந்தை தவழ்ந்தபடியே தாயை தேடி வந்து காலினை பிடித்து எழுந்து நிற்க முயற்சித்தான்.

இந்த சூழ்நிலையை சமாளித்தபடியே, லெஸ்ஸி தனது மகனை இடுப்பில் தூக்கி வைத்தபடியே வானிலை அறிக்கையை நிறைவு செய்தார். மேலும், தனது மகன் தன்னை தேடி வந்துவிட்டதாகவும் கூறினார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.