திருமணத்திற்கு வந்த முன்னாள் காதலன்.. வருங்கால கணவன் அனுமதியுடன் பாச மழையை பொழிந்த ஜோடிகள்.! காணொளி..!

உலகம்

இந்தோனேஷியா நாட்டில் மணப்பெண்ணை வாழ்த்துவதற்கு சென்ற முன்னாள் காதலன், காதலித்த பெண்ணையே திருமணம் செய்துகொண்டுள்ள சம்பவம் நடைபெற்றுள்ளது. மணமக்கள் திருமண மேடையில் உற்றார் உறவினர்கள் முன்னிலையில் நின்று கொண்டு இருந்த நிலையில், மணப்பெண்ணை வாழ்த்த முன்னாள் காதலன் திருமணத்திற்கு சென்றுள்ளார்.

இதன்போது, முன்னாள் காதலனை பார்த்த மணப்பெண், காதலனுடன் இருந்த நாட்களை எண்ணி கண்கலங்கி போய் திகைத்துள்ளார். காதலன் தன் கண்ணீரை கண்ணிற்குள் மறைத்து, முகத்தில் சிரிப்புடன் வாழ்த்துக்கள் சொல்ல கையை கொடுக்க முயற்சிக்கையில், ஒருகணம் அவள் தனது வருங்கால கணவரையும் நோக்குகிறார்.

பின்னர், ஒருமுறை தனது முன்னாள் காதலனுடன் கைகோர்த்து கட்டிபிடித்துகொள்ளவா? என சம்மதம் கேட்கவே, அந்த மணமகனும் சம்மதம் தெரிவிக்கிறார். இதனையடுத்து முன்னாள் காதல் ஜோடிகள் இருவரும் பாசத்துடன் காட்டியணைத்தனர்.

முன்னாள் காதலனும் தன் மனதிற்குள் காதல் கோட்டையுடன் இருந்தாலும், அனைத்தையும் மறைத்து பாசத்துடன் கட்டியணைக்கவே, முழு மனதுடன் முன்னாள் காதலியின் திருமணத்திற்கு வாழ்த்து தெரிவித்துவிட்டு செல்கிறார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.