இன்றைய ராசிபலன்: 2.2.2021: தை மாதம் 20ம் தேதி: இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன்!

பிப்ரவரி 02,2021

இன்று!
சார்வரி வருடம், தை 20, 2.2.2021, செவ்வாய்க்கிழமை,
தேய்பிறை, பஞ்சமி திதி மாலை 6:32 வரை,
அதன்பின் சஷ்டி திதி, அஸ்தம் நட்சத்திரம் நள்ளிரவு 12:44 வரை,
அதன்பின் சித்திரை நட்சத்திரம், சித்தயோகம்.

நல்ல நேரம் : காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை.
ராகு காலம் : பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை.
எமகண்டம் : காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை.
குளிகை : பிற்பகல் 12.00 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை.
சூலம் : வடக்கு

பரிகாரம் : பால்
சந்திராஷ்டமம் : சதயம், பூரட்டாதி
பொது : துர்கை, முருகன் வழிபாடு.

மேஷம் நேர்மை

மேஷம்: அசுவினி: நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் உதவி செய்து மகிழ்வீர்கள்.
பரணி: செய்நன்றி மறவாத செயல் ஒன்று செய்து நிம்மதி அடைவீர்கள்.
கார்த்திகை 1: தான் என்ற அகங்காரம் தலைதுாக்காமல் கவனமாக இருங்கள்.

ரிஷபம் வெற்றி

ரிஷபம்: கார்த்திகை 2,3,4: இன்று அதிர்ஷ்ட வாய்ப்புகள் வந்து சந்தோஷம் தரும்.
ரோகிணி: பிள்ளைகள் பற்றிய கற்பனைக் கவலைகள் அநாவசியமாக வரும்.
மிருகசீரிடம் 1,2: பல நாள் விரும்பிய வெளிநாட்டு வாய்ப்பு கிடைக்கும்.

மிதுனம் ஆதரவு

மிதுனம் : மிருகசீரிடம் 3,4: திடீரென்று நன்மை ஒன்று எதிர்பாராமல் வந்து சேரும்.
திருவாதிரை: சகோதர, சகோதரிகளின் செயலால் மகிழ்ச்சி ஏற்படும்.
புனர்பூசம் 1,2,3: தனிப்பட்ட கவர்ச்சி அதிகரிக்கும். காதல் உண்டாகக்கூடும்.

கடகம் ஆதாயம்

கடகம்: புனர்பூசம் 4: வெளிநாட்டு வாய்ப்பால் வருமானமும், லாபமும் கிடைக்கும்.
பூசம்: திடீர் வேலை வாய்ப்பு வரும். கவனித்து உடனே ஏற்க வேண்டும்.
ஆயில்யம்: நம்ப வேண்டியவர்களை நம்பாமல் சிரமப்பட வேண்டாம்.

சிம்மம் தேர்ச்சி

சிம்மம்: மகம்: செலவுகள் வரும். எதிர்பார்த்த வேகத்தில் விஷயங்கள் நடக்கும்.
பூரம்: அரசாங்கம் மூலம் எதிர்பார்த்த நன்மைக்கு உழைப்பை அளிப்பீர்கள்.
உத்திரம் 1: தாயாருக்கு திடீரென்று நன்மை ஒன்று வந்து மகிழ்விக்கும்.

கன்னி நட்பு

கன்னி: உத்திரம் 2,3,4: சகோதரர்களுக்கு நீங்கள் உதவி செய்ய வேண்டி வரலாம்.
அஸ்தம்: கவலை நீங்கும். வெளிநாட்டு விஷயத்தில் அதிர்ஷ்டம் வரும்.
சித்திரை 1,2: குடும்பத்தினருக்கு கோபம் தரும் நிகழ்வுகள் அக்கம்பக்கத்தில் நிகழலாம்.

துலாம் பொறுமை

துலாம்: சித்திரை 3,4: இன்று உங்களுக்கு எதிர்காலம் பற்றிய பயம் நீங்கும்.
சுவாதி: நீங்கள் பேசுவதெல்லாம் பலிக்கும் என்பதால் கவனமாக பேசுங்கள்.
விசாகம் 1,2,3: நவீன ரக வாகனம் வாங்குவீர்கள். புது விஷயம் கற்பீர்கள்.

விருச்சிகம் சிந்தனை

விருச்சிகம்: விசாகம் 4: பலநாள் கழித்து மனதில் நிம்மதியும் அமைதியும் நிலவும்.
அனுஷம்: பழைய நண்பர்களை பார்த்து பேசி மகிழ்ந்து நெகிழ்வீர்கள்.
கேட்டை: நீண்ட காலமாக கஷ்டப்படுத்திய சிரமம் நீங்கி நிம்மதி அளிக்கும்.

தனுசு நன்மை

தனுசு: மூலம்: ஒருவருக்கு நன்மை செய்து அவரின் பாராட்டை பெறுவீர்கள்.
பூராடம்: எதிர்பார்த்த கடன் கிடைப்பதால் பெரியதொரு விஷயம் துவங்குவீர்கள்.
உத்திராடம் 1: காதல் ஏற்படும். செலவுகள் கட்டுப்பட்டு சேமிப்பு கூடும்.

மகரம் விருத்தி

மகரம்: உத்திராடம் 2,3,4: சந்தோஷமும் அல்லாததும் மாற்றி மாற்றி வரும்.
திருவோணம்: குழந்தை பிறப்பு காரணமாக குடும்பங்கள் இணையும்.
அவிட்டம் 1,2: புதிய வருமானம் கிடைப்பதற்கான செயலில் ஈடுபடுவீர்கள்.

கும்பம் களிப்பு

கும்பம்: அவிட்டம் 3,4: தேவையற்ற விஷயங்களில் மூக்கை நுழைக்க வேண்டாம்.
சதயம்: தாயாருக்கு உங்களால் ஏதும் சிரமம் வராதபடி கவனமாக இருங்கள்.
பூரட்டாதி 1,2,3: விளையாட்டாகக்கூடத் தீமை தரும் செயலை செய்ய வேண்டாம்.

மீனம் மேன்மை

மீனம்: பூரட்டாதி 4: பழைய பாவங்கள் நீங்கும் படியான செயல்கள் செய்வீர்கள்.
உத்திரட்டாதி: குழந்தைகளுக்கு நன்மை தரும் முயற்சி பலிதமாகும்.
ரேவதி: சகோதரர்களுடன் இணக்கமாக அனுசரித்துச் செல்வது நல்லது.