அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த சம்பவம்.! பாராட்டு மழையில் பெண் உதவி ஆய்வாளர்.!

இற்தியா

முதியவர் ஒருவரின் அ.ழுகிய நி.லையில் இ.ருந்த ச.டலத்தை, பெண் உதவி ஆய்வாளர் ஒருவர் தூக்கி சுமந்து சென்ற சம்பவம் அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

ஆந்திர மாநிலம், ஸ்ரீகாகுளம் மாவட்டத்தின் அதிவிக்கொத்துரு கிராமத்தில் உள்ள ஒரு விவசாய நிலத்தில் ஒரு முதியவர் இ.றந்து கி.டப்பதாக காசிபக்கா நகராட்சி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த துணை ஆய்வாளர் ஸ்ரீஷா முதியவரின் ச.டலத்தை பா.ர்வையிட்டார்.

முதியவரின் ச.டலம் அ.ழுகி து.ர்நாற்றம் வீ.சத் தொடங்கியது. யாரும் அந்த ச.டலம் அருகில் செல்ல மறுத்து விட்டனர். இந்த முதியோர் குறித்து வெளியான முதல் தகவலின்படி, அவர் அந்த பகுதியில் யாசகம் செய்து வந்தவர் என்பது மட்டும் தெரிய வந்துள்ளது.

இதனைத்தொடர்ந்து பெண் துணை ஆய்வாளர் ஸ்ரீஷா தனியார் தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் அந்த முதியவரின் உடலை இறுதி சடங்கு செய்ய முடிவு செய்தார். ஆனால், முதியவரின் ச.டலம் அ.ழுகிய நி.லையில் து.ர்நாற்றம் வீ.சியதால் கிராம மக்கள் முதற்கொண்டு யாரும் உதவிக்கு வர ம.றுத்தனர்.

இதனை அடுத்து தொண்டு நிறுவனத்தின் ஊழியர் ஒருவரின் உதவியுடன் சேர்ந்து, முதியவரின் ச.டலத்தை தனது தோளில் சுமந்து சுமார் 2 கிலோமீட்டர் வரை தூ.க்கி சென்று இறுதி சடங்கு செய்துள்ளார் பெண் ஆய்வாளர் ஸ்ரீஷா.

இது குறித்த செய்தியும், புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வெளியாகியதால் காவல்துறை பெண் அதிகாரி ஸ்ரீஷா-வின் இந்த செயலுக்கு ஆந்திர மாநிலத்தில் உள்ள பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். மேலும், நாட்டில் உள்ள பல்வேறு தரப்பினரும் துணை ஆய்வாளர் ஸ்ரீஷா-வுக்கு பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.